Connect with us
Cinemapettai

Cinemapettai

biggboss5

Videos | வீடியோக்கள்

மீண்டும் பிக்பாஸ் களத்தில் கமல்.. தெறி மாஸாக வெளிவந்த வீடியோ

பிக்பாஸ் 5 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த உலக நாயகன் கமலஹாசனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் கடந்த வாரம் கமல்ஹாசனுக்கு பதிலாக நடிகை ரம்யா கிருஷ்ணன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

இவருக்கு ஒரு தரப்பினர் ஆதரவு தந்தாலும், பெரும்பாலான ரசிகர்கள் கமல்ஹாசன் விரைவில் குணமாகி நிகழ்ச்சிக்கு திரும்ப வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர். மேலும் ரம்யா கிருஷ்ணனை கமல்ஹாசன் அளவுக்கு ஒப்பிட்டு பார்த்து கலாய்த்து வந்தனர்.

இந்த வாரமாவது கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். இந்நிலையில் சனிக்கிழமையான  இன்று பிக்பாஸ் நிகழ்ச்சியின் ப்ரோமோவை விஜய் டிவி சற்று முன்பு வெளியிட்டுள்ளது.

அதில் மக்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்த கமல்ஹாசன் அசத்தலாக என்ட்ரி கொடுத்துள்ளார். உங்கள் அன்பினால் மட்டுமே மீண்ட நான், இன்று உங்களுடன் மீண்டும் நான், இனி என்றுமே உங்கள் நான் என்று மாஸாக கூறுகிறார்.

மேலும் இந்த சீசனை நான் வெளியில் இருந்து பார்க்கும் போது வித்தியாசமாக இருந்தது. வீட்டில் உள்ள அனைவரும் தனித்தனியாக விளையாடுகின்றனர். அவர்களுக்கு என்று ஒரு யூகமும், யுக்தியும், திட்டமும் இருக்கிறது அதன் விளைவுகளை இன்று இரவு காண்போம் என்கிறார்.

தற்போது இந்த ப்ரோமோ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. கொரோனாவில் இருந்து மீண்டு வந்துள்ள கமல்ஹாசனுக்கு ரசிகர்கள் பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த வாரம் முழுவதும் பிக் பாஸ் வீட்டில் நடந்த சண்டையை பற்றி கமல்ஹாசன் தன் ஸ்டைலில் விசாரித்து தீர்ப்பு வழங்குவதை பார்க்க ஆவலாக இருப்பதாக ரசிகர்கள் பலரும் கூறுகின்றனர்.

Continue Reading
To Top