கமல்ஹாசன் ஒரு சிறந்த காமெடியன்.. பிரபல இயக்குனர் ஓபன் டாக்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் கமல்ஹாசனை அனைவரும் உலகநாயகன் என அழைத்து வருகின்றனர். பல வெற்றிப் படங்களை வழங்கிய கமல்ஹாசன் நடிப்பை பலரும் பாராட்டியுள்ளனர்.

இப்படிப்பட்ட நடிகரை பிரபல இயக்குனர் ஒருவர் சிறந்த காமெடியன் என கூறியுள்ளார். அவர் வேறு யாருமல்ல இயக்குனர் ராம் பாலா தான். விஜய் டிவியில் ஒளிபரப்பான லொள்ளு சபா என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் பிரபலம் ஆனவர் தான் ராம்பாலா.

இவர் மூலமாக சினிமாவில் அறிமுகமானவர்கள் தான் சந்தானம், ஜீவா மற்றும் யோகி பாபு. இவர்கள் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.

இது மட்டுமின்றி இவர் வெள்ளித்திரையில் சில படங்களையும் இயக்கி உள்ளார். சினிமாவிற்கு இவர் அறிமுகப்படுத்திய சந்தானத்தை வைத்து தில்லுக்கு துட்டு படத்தையும், இடியட் என்னும் மற்றொரு படத்தையும் இயக்கி உள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் ராம் பாலா அளித்த பேட்டி ஒன்றில், “நான் ஒருமுறை கமல்ஹாசனிடம் பேசிக்கொண்டிருந்த போது, எனக்கு மிகவும் பிடித்த காமெடியன் நீங்கள்தான் எனக் கூறினேன். அதை கேட்டு மற்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால், கமலோ அவர் சொல்வது சரிதான். காமெடி செய்வது தான் மிகவும் கஷ்டம் என கூறியதாக” ராம் பாலா கூறியுள்ளார்.

kamal-cinemapettai
kamal-cinemapettai
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்