இந்தியன் படத்தில் இதை கவனித்துள்ளீர்களா? கமலுக்கு குரல் கொடுத்த எஸ்பிபி

படங்களில் ஒரு சில நடிகர் மற்றும் நடிகைகளை தவிர பெரும்பாலான நடிகர்களுக்கு டப்பிங் ஆர்ட்டிஸ்ட்கள் தான் குரல் கொடுப்பார்கள். சிலருக்கு மொழி பிரச்சனை உள்ள காரணத்தால் டப்பிங் ஆர்ட்டிஸ்ட்களை பேச வைப்பதுண்டு. ஆனால் சில நடிகர்கள் அவர்களின் சொந்த குரலிலேயே டப்பிங் செய்து கொடுத்து விடுவார்கள்.

அந்த வகையில் தமிழ் சினிமாவில் கம்பீரமான குரலுக்கு சொந்தக்காரர் என்றால் அது நடிகர் கமல்ஹாசன் தான். இவரது குரல் மற்ற நடிகர்களில் இருந்து தனித்து காணப்படும். இவருக்கு இவருடைய குரலை தவிர வேறு யாரின் குரலும் சுத்தமாக பொருந்தாது. எனவே இவரின் படங்களுக்கு கமல் தான் டப்பிங் பேசுவார்.

ஆனால் கமலுக்கு பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் குரல் கொடுத்துள்ள சுவாரஸ்ய சம்பவம் ஒன்று நடந்துள்ளது. ஆமாங்க அதன்படி இயக்குனர் சங்கர் மற்றும் கமல் கூட்டணியில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற இந்தியன் படத்தில் தான் கமல்ஹாசனுக்கு பாடகர் எஸ்பிபி குரல் கொடுத்துள்ளாராம்.

இந்தியன் படத்தின் படப்பிடிப்பு எல்லாம் முடிவடைந்து படம் வெளியீட்டிற்கு தயாராக இருந்த நிலையில் தான் கமல் ஒரு சிறிய வசனத்தை பேசாமல் விட்டது சங்கருக்கு தெரியவந்துள்ளது. ஆனால் அந்த சமயத்தில் கமல் இந்தியாவில் இல்லையாம். வெறும் 3 வினாடி டயலாக்கிற்காக கமலை வரவைப்பதா என யோசித்த சங்கர் மாற்று வழியை யோசித்தார்.

அதன்படி பின்னணி பாடகர் எஸ்பிபியை அழைத்து கமலுக்கு பதில் அந்த டயலாக்கை டப்பிங் பேச வைத்தாராம். கவுண்டமணியை ஒட்டகம் கடித்ததுபோல் ஒரு காமெடி காட்சி இருக்கும். அதில் கமல் கவுண்டமணியை பார்த்து, “அதுகிட்ட ஏன்டா ஸ்டொமக்க காட்டுன” அப்படினு கேட்பாரு. இந்த டயலாக்க தான் எஸ்பிபி பேசிருக்காரு. நீங்க படம் பார்த்தா நல்ல கவனிங்க அவரோட வாய்ஸ் அப்படியே தனியா தெரியும்.

படத்துல அந்த சீன ரொம்பவும் உன்னிப்பா கவனிச்சா தான் அது எஸ்பிபியோட வாய்ஸ்னு தெரியும். மத்தபடி அவ்வளவு பெரிய வித்தியாசம் தெரியாது. அதனால் அந்த சமயத்துல ஆடியன்ஸ் அதை பெருசா எடுத்துக்கல.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்