சென்னை:

விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. இதனை கமல்ஹாசன் தொகுத்து வழங்க உள்ளதாக சின்னத்திரை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள லோனேவாலாவில் பிரமாண்டமான வீடு தயாராகி வருகிறது. இந்த வீட்டில் தங்கப் போகும் சிறப்பு விருந்தினர்கள் யார் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பிக்பாஸ் இந்தி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வந்த பிரபல நிகழ்ச்சி. இது 10 சீசன்களை கடந்து அங்கு சாதனை படைத்துள்ளது. சல்மான்கான் ஆறு சீசன்களையும், அமிதாப், ஷில்பா ஷெட்டி, சஞ்சய் தத், அஷ்ரத் வர்ஷி ஆகியோர் தலா ஒரு சீசனையும் தொகுத்து வழங்கியுள்ளனர். இது கன்னடத்திலும் தயாரிக்கப்பட்டு ஒளிபரப்பானது நடிகர் சுதீப் தொகுத்து வழங்கினார்.

பிக்பாஸ் கமல்ஹாசன்

பிக்பாஸ் கமல்ஹாசன்

தற்போது தமிழுக்கு வரும் இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்க உள்ளார். விஜய் டிவியில் வரும் ஜூலையில் பிக் பாஸ் ஒளிபரப்பாக உள்ளது. கடந்த மூன்றாண்டுகளாக பிக் பாஸை தமிழ் பேச வைக்க எண்டமால் நிறுவனம் முயற்சி செய்து வந்தது. ஆனால் அதற்கான சூழல் தற்போதுதான் அமைந்து வந்துள்ளது.

அதிகம் படித்தவை:  என் வேண்டுகோளை ஏற்று தமிழகத்துக்கு தண்ணீர் விட்டதற்கு நன்றி: விஷால்!

தமிழ் பிக்பாஸ்

தமிழ் பிக்பாஸ்

இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் 10 முதல் 12 போட்டியாளர்கள் பங்கேற்கின்றன. இவர்கள் அனைவரும் பிரபலங்களே. ஷூட்டிங், பார்ட்டி என்று எந்நேரமும் மேக்கப் கலையாத முகத்துடன் பார்த்து பழக்கப்பட்ட இவர்களை ஒரே வீட்டில் இயல்பான முகம், குணத்துடன் 100 நாட்கள் ரசிகர்கள் பார்க்க உள்ளனர். போட்டியாளர்களுக்கு 15 நாட்கள் கொண்ட ஒரு பயிற்சி முகாமுக்கான ஏற்பாடு நடக்கிறது.

வீடு

வீடு

பிக் பாஸுக்கான பிரத்யேக வீடு புனேவில் உள்ள லோனோவாலாவில் அமைக்கப்பட்டு வருகிறது. அனைத்து வசதிகளும் கொண்ட அந்த சொகுசு வீட்டில் கழிவறை, குளியலறை தவிர அனைத்து இடங்களிலும் 60 முதல் 80 கேமராக்கள் வரை பொருத்தப்படும். 24 மணிநேரமும் அதன் மூலம் அவர்கள் கண்காணிக்கப்படுவார்கள்.

விதிகள் என்ன?

விதிகள் என்ன?

இதில் கலந்து கொள்ளும் நபர்கள் கோபப்பட்டு வீட்டில் உள்ள எந்தப் பொருட்களுக்கும் சேதம் ஏற்படுத்தக் கூடாது. பகல் நேரத்தில் உறங்க அனுமதி கிடையாது. அவர்களுக்கான வெளியேறும் நேரம் வரும் வரை வீட்டைவிட்டு வெளியேறக் கூடாது. பரிசோதனைக்குப்பிறகே அந்த வீட்டுக்குள் போட்டியாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள். அங்கு வீட்டில் புகைப்பிடிக்கவோ, மது அருந்தவோ அனுமதி இல்லை. விதிகளை மீறுபவர்கள் போட்டியில் இருந்து உடனடியாக வெளியேற்றப்படுவார்கள்

அதிகம் படித்தவை:  ஜூனியர் ஆர்டிஸ்டுகளின் பரிதாப வாழ்க்கை! வெளிச்சத்துக்கு வந்தது..

டிஆர்பி எகிறும்

டிஆர்பி எகிறும்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ராக்கி சாவந்த், சன்னி லியோன், வீணா மாலிக் உள்ளிட்ட கவர்ச்சி நடிகைகள் பங்கேற்றனர். பாலிவுட் பட உலகிலும் நுழைந்தார் சன்னி லியோன். இந்தி பிக் பாஸில் ஆண், பெண் போட்டியாளர்கள் ஒரே அறையில் தங்கிக்கொள்ள அனுமதிக்கப்பட்டார்கள். ஆனால் தமிழில் தனித்தனி அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கப் போகும் பிரபலங்கள் யார் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

100 எபிசோட்

100 எபிசோட்

100 நாள், 100 எபிசோட். தினமும் இரவு நேரத்தில் ஒளிபரப்பப்படும் இந்த நிகழ்ச்சி மறுநாள் மதிய நேரத்தில் மறுஒளிபரப்பு செய்யப்படும். தொகுப்பாளர் வாரத்துக்கு ஒருநாள் மட்டுமே வருவார். அப்போது போட்டிகள், கலந்துரையாடல்கள் இருக்கும். நிறைய சவால்களை சந்தித்து சாதனை படைப்பவருக்கு 50 லட்சம் ரூபாய் பரிசுத்தொகையாக அளிக்கப்படும் என்று பிக்பாஸ் நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் கூறியுள்ளனர்.