Tamil Cinema News | சினிமா செய்திகள்
கமலஹாசன்-கௌதமி பிரிவிற்கு காரணமே இவர் தானம்.. காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சுதானே!
தமிழ் சினிமா மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் என பல மொழிகளில் நடித்து புகழ்பெற்றவர் கௌதமி. சில வருடங்களுக்கு முன்னதாக அதிகாரப்பூர்வமாக நான் கமலஹாசனை பிரிகிறேன் என்று கௌதமி கூறிவிட்டார்.
1998ல் சந்திப் என்பவரை திருமணம் செய்துகொண்டு, 1999-ல் சுப்புலக்ஷ்மி என்ற குழந்தையை பெற்றெடுத்து, அதே வருடத்தில் விவாகரத்து செய்து விட்டார் கௌதமி. அதற்குப்பின் 2005 முதல் கமலஹாசனுடன் லிவிங் டு கெதர் வாழ்க்கை வாழ்ந்து வந்தார்.
இவர்கள் பிரிவுக்கு பல காரணங்கள் கூறப்பட்டு இருந்தது, ஆனாலும் கூட கௌதமிக்கு உடல்நிலை சரியில்லாத நேரத்தில் கமலஹாசன் கூடவே இருந்து பார்த்துக் கொண்டாராம், அந்த அளவிற்கு காதலாம்.
இப்படி இருக்க ஸ்ருதிஹாசன், அக்ஷராஹாசன் அளவிற்கு சுப்புலக்ஷ்மி சினிமாவில் வாய்ப்பு இல்லாமல், பிரபலம் ஆகாமல் இருக்கிறாராம். கமலஹாசனின் மகள்கள் மட்டும் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் இந்த சூழ்நிலையில், தனது மகள் சுப்புலட்சுமிக்கு எந்த ஒரு சினிமா அடையாளமும் இல்லாமல் இருப்பது மிகவும் மன வேதனை அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

kamal-gauthami
சுப்புலட்சுமி படிக்கும்போதே சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரிப்பில் வெளிவந்த வேலையில்லா பட்டதாரி 2 ஆம் பாகத்தில் கதாநாயகியாக நடிக்க இருந்ததாக செய்திகள் வெளிவந்தது. ஆனால் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் தற்போது நடிப்பதற்கு ஆர்வம் இல்லை என்றும் கௌதமி அப்போது தெரிவித்துவிட்டார்.
இதனால் தான் கமலஹாசனை விட்டு பிரிந்து உள்ளதாகவும், செய்திகள் வெளிவந்து உள்ளது. எப்படிப் பார்த்தாலும் காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சிதனே! தனது மகள் சுப்புலட்சுமிக்கு படவாய்ப்புகள் இருக்குமா? என்று இயக்குனர்களின் கதவை தட்டி வாய்ப்பைத் தேடி வருகிறாராம் கவுதமி.
தனது 52 வயதில் 30 வருட சினிமா வாழ்க்கை மகளுக்காக பயன் படமா போயிடுமோ என்ற வருத்தில் உள்ளாராம். கமல்ஹாசன் இதற்கு செவி சாய்பரா என்று பொருத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.
