இளைய தளபதி விஜய் தீவிர ரஜினி ரசிகர் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், கமல்ஹாசனை ஒரு குரு ஸ்தானத்தில் அவர் வைத்து பார்த்து வருகின்றார்.

இந்நிலையில் விஜய் நடிப்பில் சில வருடங்களுக்கு முன் வெளிவந்த போக்கிரி பிரமாண்ட வெற்றியை பெற்றது.

இப்படத்தை பிரபுதேவா இயக்கியிருந்தார், இப்படத்தின் 175வது நாள் வெள்ளி விழா ரஜினி தலைமையில் நடக்கவிருந்தது.

ஆனால், கடைசி நேரத்தில் ரஜினிக்கு வேறு ஒரு நிகழ்ச்சி இருக்க, இதில் கலந்துக்கொள்ள முடியவில்லை.

இதனால், என்ன செய்வது என்று தெரியாமல் இருந்த படக்குழு, விஜய்யின் தந்தை SAC கமலிடம் பேச, இதில் என்ன இருக்கின்றது நான் வருகிறேன் என்று உடனடியாக வந்து அந்த விழாவில் கலந்துக்கொண்டு சிறப்பித்தார்.