Tamil Cinema News | சினிமா செய்திகள்
பிக்பாஸ் வீட்டில் எண்ட்ரியாகும் உலக நாயகன் மகள்.. இது என்னடா புது ட்விஸ்டு
பிக்பாஸ் வீட்டில் நடிகை ஸ்ருதிஹாசன் எண்ட்ரி கொடுக்க இருப்பதாக புதிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
பிக்பாஸ் இந்த பெயருக்கே இன்று பலர் அடிமை என்று கூட சொல்லலாம். தினம் இரவு 9 மணிக்கு சிறுசு முதல் பெரியவர் வரை டிவி முன்னர் அமர்ந்து விடுகின்றனர். முதல் சீசனிலேயே கட்டிப்புடி, மருத்துவ முத்தம், சேரி, விஷம், 5 செகண்ட் என்ற வார்த்தைகள் ரசிகர்களிடம் மாஸ் வைரலாக பரவியது. இதன் காரணமாக இரண்டாவது சீசனுக்கு மக்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், அரசியலில் கால் பதித்த கமல் நடிப்பையே விட இருப்பதாக அறிவித்த நிலையில், பிக்பாஸிற்கு வருவாரா என பலரும் சந்தேகித்தனர். இருந்தும், கமல் இல்லாத பிக்பாஸா என்ற நம்பிக்கை குரல்களும் ஆங்காங்கே எதிரொலித்தது. ரசிகர்களின் நம்பிக்கையை பொய்யாக்காமல் இரண்டாவது சீசனையும் தொகுத்து வழங்க கமலே எண்ட்ரி கொடுத்தார்.
புது தெம்பு ஒன்று அவரிடம் இருப்பதை அவரின் முதல் எபிசோடை பார்த்தவர்கள் கவனிக்க தவறாமல் இல்லை. போட்டியாளர்களாக நடிகைகள் மும்தாஜ், யாஷிகா ஆனந்த், ஜனனி ஐயர், ஐஸ்வர்யா தத்தா, காமெடியன்கள் தாடி பாலாஜி, செண்ட்ராயன், டேனியல், அனந்த் வைத்தியநாதன், பொன்னம்பலம், வைஷ்ணவி, நித்யா பாலாஜி, பாடகி ரம்யா, ஷாரிக் ஹாசன், மஹத், மமதி சாரி, ரித்விகா ஆகியோர் கலந்து கொண்டனர். கடந்த வாரம் முழுவதும் பிக்பாஸ் ரசிகர்கள் இது என்னப்பா இம்புட்டு டல் அடிக்கிது என்ற ரீதியில் பேச தொடங்கினர். முதல் சீசனை பார்த்து வந்த போட்டியாளர்கள் கொஞ்சம் உஷாராக தான் நடந்து கொண்டார்கள். வார இறுதியில் வந்த கமல் முதல் சந்திப்பிலேயே சிக்ஸையும், போரையும் தூக்கி ரசிகர்களை ஆசுவாசப்படுத்தினார். அந்த வார நிகழ்ச்சி முடிவில் தனது விஸ்வரூபம் 2 படத்தின் சிங்கிளை இந்த மேடையில் அடுத்த வாரம் வெளியிட இருப்பதாகவும் அறிவித்தார்.
இந்நிலையில், வெளியிடப்படும் அப்பாடலுக்கு கமலின் மகளும், நடிகையுமான ஸ்ருதிஹாசன் நடனமாட இருப்பதாக புதிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இத்தகவலை ஜிப்ரான் தனது ட்விட்டர் மூலம் உறுதிப்படுத்தி இருக்கிறார்.
