உலகநாயகன் பார்த்து கத்துக்கோங்க ரஜினி.. வயசுக்கு தகுந்த மாதிரி நடந்துக்கோங்க

உலகநாயகன் கமலஹாசன் எடுத்துள்ள முடிவை போன்று சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் முடிவெடுத்தால் அவரது திரைப்படங்கள் நன்றாக ஓடி வெற்றிப்பெறும் என கோலிவுட் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக உலக நாயகன் கமல்ஹாசன் நடிக்கும் அணைத்து திரைப்படத்திலும் ரொமான்ஸ் காட்சிகள், முத்தக் காட்சிகள் இல்லாமல் எந்த திரைப்படமும் வெளிவராது. இதன் காரணமாகவே பல நடிகைகள் கமலஹாசனின் திரைப்படத்தில் நடிப்பதற்காக யோசித்து, படத்தை நிராகரிப்பார்கள்.

80 கால கட்டத்திலிருந்து இதுபோன்று கமலஹாசனின் திரைப்படங்களில் நடப்பது வழக்கம். ஆனால் சமீபத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் திரைப்படம் பிரம்மாண்டமான ஹிட் கொடுத்த நிலையில், இத்திரைப்படத்தில் கமலுக்கு ஜோடியாக எந்த கதாநாயகியும் நடிக்கவில்லை

இத்திரைப்படம் வசூல் சாதனை படைத்த நிலையில், கமலஹாசன் தான் நடிக்கப் போகும் இனி வரும் படங்களில் கதாநாயகிகள் இருந்தாலும் ரொமான்ஸ் மற்றும் முத்த காட்சிகளில் நடிக்கமாட்டேன் என அறிவித்துள்ளார். மேலும் கதைக்கு தேவைப்படும் காட்சிகளுக்கு மட்டுமே தான் நடிக்க போவதாகவும் கமலஹாசன் தெரிவித்துள்ளார்.

இதனிடையே 70 வயது ஆகியும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், தான் நடிக்கும் திரைப்படங்களில் கதாநாயகிகளுடன் ரொமான்ஸ் செய்யும் காட்சிகளை, தற்போது வரை விடாமல் நடித்து வருவது, அனைவருக்கும் பேசும் பொருளாக மாறியுள்ளது. சமீபத்தில் கூட நெல்சனின் இயக்கத்தில் உருவாக உள்ள தலைவர் 169 படத்திற்கு தனக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா ராய் தான் நடிக்கவேண்டுமென ரஜினிகாந்த் அடம்பிடித்து வருகிறார்.

மேலும் சமீபத்தில் வெளியான அண்ணாத்த திரைப்படத்தில் நயன்தாராவை பட்டு பட்டு என அழைத்து பேசிய வசனத்தை 70 ஆகியும் ரஜினிக்கு ரொமான்ஸ் கேக்குதா என மீம்ஸ் போட்டு நெட்டிசன்கள் வறுத்தெடுத்தனர். இதனிடையே தற்போது கமலஹாசன் எடுத்த முடிவு போல சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தின் கதையில் கவனம் செலுத்தி நடித்தால் இனிவரும் திரைப்படங்கள் வெற்றியடைய அதிக வாய்ப்பு இருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் தெரிவித்து வருகின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்