Tamil Cinema News | சினிமா செய்திகள்
சர்ச்சையில் சிக்கி சின்னாபின்னமான கமல்ஹாசன் படங்கள்.. ஆனாலும் உலகநாயகன் கெத்து தான்!
தமிழ் சினிமாவை உலகிற்கே தெரியும் படி வெளிக்கொண்டு வந்த பெருமை உலகநாயகன் கமலஹாசனையும் சேரும். இவர் நடிப்பில் பிரம்மாண்ட வெற்றி பெற்று, விருதுகளையும் தட்டிச் சென்ற படங்கள் என்று பார்த்தால் ஏராளம்.
அப்படி விருதுகளை பெற்ற படங்கள் சர்ச்சையானதும் உண்டு. அதுவும் அரசியல் ரீதியாகவும், சாதி ரீதியாகவும், மத ரீதியாகவும், சர்ச்சையில் சிக்கியது உண்டு. இப்படி சர்ச்சையில் சிக்கி வெற்றி பெற்ற படங்களின் வரிசையில் தற்போது பார்க்கலாம்.
தேவர் மகன் – 1992 -ல் வெளிவந்த படம் தேவர் மகன், ஒரே ஜாதிப் பிரிவினை வைத்து படத்தின் கதை அமைக்கப்பட்டிருக்கும். குடும்ப சண்டை, ஊர் சண்டையாக மாறி கமலஹாசன் இறுதியில் நாசரை கொன்று விடுவார். ஒரே ஜாதி வைத்து படம் எடுக்கப்பட்டதால் பெரும் சர்ச்சையை கிளப்பியது. ஆனாலும் கூட 5 நேஷனல் விருதுகளை தட்டிச் சென்றது கமலஹாசனை, இந்திய அளவில் திரும்பிப் பார்க்க வைத்த படமாகப் பார்க்கப்பட்டது.
ஹே ராம் – 3 நேஷனல் விருதுகளை வென்று ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட படமாகப் பார்க்கப்பட்டது. இந்த படத்தில் காந்தியை தவறாக சித்தரிப்பதாக சர்ச்சை கிளம்பியது.
விருமாண்டி – 2004 ஆம் ஆண்டு கமலஹாசன் சண்டியர் என்ற பெயர் வைத்து வெளி வருவதற்கு முன்னதாக இந்த படத்தின் தலைப்பிற்கு புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி எதிர்ப்பு தெரிவித்தார். பெரும் சர்ச்சையை கிளப்பினார், இதனால் சண்டியர் என்ற தலைப்பை விருமாண்டி என்று மாற்றப்பட்டு வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.
மும்பை எக்ஸ்பிரஸ் – கலைஞரின் ஆட்சியில் தமிழ் படங்கள் தலைப்பு தமிழில் மட்டும் தான் இருக்க வேண்டும் என்ற சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இதனால் தமிழ் சமூகங்கள் மும்பை எக்ஸ்பிரஸ் என்ற தலைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும் மீறி அதே பெயரில் படத்தை வெளியிட்டால் படம் எதிர்பார்த்த அளவு ஓடவில்லை என்பது தான் உண்மை.
மன்மதன் அன்பு – கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில், 2010 ஆம் ஆண்டு கமல்ஹாசன், த்ரிஷா நடிப்பில் வெளிவந்த படம். இந்த படத்தில் எழுதப்பட்ட பாடலின் வரிகள் ஆபாசமாக இருந்ததால் சர்ச்சை கிளம்பியது. இதனால் அந்த பாடல் சென்சார் போர்டு மூலம் நீக்கப்பட்டு வெளியிடப்பட்டதால், கமலஹாசன் பெரும் கோபத்தை கிளப்பியது.
வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் – இந்த படத்தில் கமலஹாசன் ரவுடியாக இருந்து எப்படி டாக்டராக மாறுகிறார் என்பது தான் கதை, அது மட்டுமில்லாமல் ஒரு டாக்டர் நோயாளியிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை விளக்கிய படமாக மக்கள் மத்தியில் மாபெரும் வெற்றி பெற்றது. ஆனால் இந்த படத்தில் மருத்துவ பிரிவினரிடம் இருந்து பெரும் எதிர்ப்பு கிளம்பியது, மருத்துவத்தை அவமானப்படுத்தியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
விஸ்வரூபம் – 2013 ஆம் ஆண்டு கமலஹாசனின் இயக்கத்தில் ரசிகர்களிடையே மாபெரும் வெற்றி பெற்ற படம் விஸ்வரூபம். இந்த படத்தின் இரண்டாம் பாகமும் வெளியிடப்பட்டது. இந்த படத்தின் தலைப்பு சன்ஸ்கிரிட் மொழியில் வைக்கப்பட்டதால், இந்து மக்கள் கட்சி எதிர்ப்பினை தெரிவித்தனர், போராட்டங்களும் நடந்தது குறிப்பிடத்தக்கது.
இதனால் கமலஹாசன், வர்த்தக ரீதியாக தோல்விகளைச் சந்தித்தாலும் டிடிஎச் மூலம் ரிலீஸ் பண்ணி விடலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டார். மதரீதியாக முஸ்லிம் மக்களை தாக்கி படம் எடுத்துள்ளதாகவும் எதிர்ப்புகள் கிளம்பியது. ஆனாலும் தமிழ், தெலுங்கு,ஹிந்தி வெர்ஷன் 2013-ம் ஆண்டும் வெளியிடப்பட்டது.
பாபநாசம்- மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான த்ரிஷ்யம் படத்தின் ரீமேக்கான படம் பாபநாசம். மலையாள எழுத்தாளர் ஒருவர் தன்னுடைய படைப்பில் இருந்து இந்த கதை திருடப்பட்டுள்ளதாக வழக்கு பதிவு செய்தார். இதனால்அந்த வழக்கு விசாரிக்கப்பட்டு இரண்டு மூன்று மாதங்கள் தள்ளி படம் வெளிவந்ததால் வர்த்தக ரீதியாக பல பிரச்சினைகளை சந்தித்தார் கமல்ஹாசன்.
இன்றளவும் சினிமாவில் சம்பாதித்த பணத்தை சினிமாவில் செலவிடும் தயாரிப்பாளராக கமலஹாசனை பார்க்கலாம். தற்போது இந்தியன்-2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து காரணமாக 3 பேர் உயிரிழந்தனர், படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு தற்போது இயக்குநர் ஷங்கர், கமலஹாசன்,லைகா நிறுவனங்கள் எப்போது படப்பிடிப்பு தொடங்கும் என்பதை விவாதித்து வருகின்றனர்.
