புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

சக நடிகர்களின் இறுதி தருணத்தை தொடர்ந்து தவிர்க்கும் கமல்.. என்ன ஆண்டவரே இதெல்லாம்?

Kamal Haasan: சமீப காலமாக உலகநாயகன் கமலஹாசன் மீது ஒரு குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. கமலை பொறுத்த வரைக்கும் அவருக்கு சினிமாவில் நெருக்கமான நண்பர்கள் பலரும் உண்டு. அதுமட்டுமில்லாமல் சிலர் அது நடிப்பால் அதிகம் ஈர்க்கப்பட்ட கமல் அவர்களுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளை கொடுப்பார்.

இந்த குறிப்பிட்ட நபர்கள் இல்லாமல் கமல் படமே எடுக்க மாட்டார் என்று கூட சொல்வது உண்டு. அப்படி கமலஹாசனின் பெரும்பாலான படங்களில் தன்னுடைய நடிப்பு திறமையை காட்டியவர் தான் டெல்லி கணேஷ்.

அவ்வை சண்முகி, மைக்கேல் மதன காமராஜன், அபூர்வ சகோதரர்கள் என கமலஹாசனின் பல முக்கியமான படங்களில் இவர் நடித்திருக்கிறார். டெல்லி கணேஷ் தன்னுடைய 80 வது வயதில் இன்று வயது மூப்பு காரணமாக இயற்கை எய்தினார்.

என்ன ஆண்டவரே இதெல்லாம்?

நெருக்கமாக இருந்த இந்த நடிகர் இறுதிச் சடங்கில் கமல் கலந்து கொள்ளப் போவதில்லை. இதற்கு காரணம் அவர் அமெரிக்காவில் AI டெக்னாலஜி பற்றி மூன்று மாதம் படித்துக் கொண்டிருக்கிறார். இதனால் அவரால் உடனே அமெரிக்காவில் இருந்து கிளம்பி வர முடியாது.

டெல்லி கணேசுக்கு மட்டும் தான் கமல் இப்படி இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளாமல் இருக்கிறாரா என்று நமக்குத் தோன்றுகிறது. இதற்கு காரணம் இதற்கு முன் இறந்த சிவாஜி ராவ், மயில்சாமி, மனோபாலா என்று யாருடைய இறுதி தருணத்திலும் கமல் கலந்து கொள்ளவில்லை.

இவர்கள் எல்லாம் கமலின் ஆஸ்தான நடிகர்கள் என்று சொல்லும் அளவுக்கு இருப்பவர்களின் இறுதிச்சடங்குகள் கமல் கலந்து கொள்ளாமல் இருப்பது மக்களுக்கு பெரிய ஏமாற்றமாக இருக்கிறது. இது மட்டும் இல்லாமல், கமலின் குருவான கே பாலச்சந்தர் இறுதிச் சடங்கில் கூட கமல் கலந்து கொள்ளவில்லை.

அந்த சமயத்திலும் அவர் அமெரிக்காவில் தான் இருந்தார். ஏன் இது போன்று தன்னுடைய சக நடிகர்களின் இறுதிச்சடங்கு கமல் தவிர்த்து வருகிறார் என்பது தற்போது தமிழ் சினிமா ரசிகர்களின் பெரிய கேள்வியாக இருக்கிறது.

- Advertisement -

Trending News