கிரேசி மோகனை வைத்து கமல் ஹிட்டடித்த 8 படங்கள்.. வழியே இல்லாமல் ரூட்டை மாற்றிய ஆண்டவர்!

கமலஹாசனின் ஆரம்பகால படங்களில் அதிகம் நகைச்சுவை கலந்திருக்கும். இதற்கு முக்கிய காரணம் அப்படத்தின் வசனம் கிரேசி மோகன். இவரும், கமலஹாசனும் நெருங்கிய நண்பர்கள். இவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றிய படங்கள் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும். கிரேசி மோகனின் மறைவால் தற்போது உள்ள கமலின் படங்களில் நகைச்சுவை என்ற அந்த காலியாக உள்ளது.

காதலா காதலா: சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில் கிரேசி மோகன் கதையில் உருவான படம்தான் காதலா காதலா. இப்படத்தில் கமல்ஹாசன், பிரபுதேவா, சௌந்தர்யா, ரம்பா, எம்எஸ் விஸ்வநாதன் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் காதலா காதலா. இப்படத்தில் ஜூனியர் விகடனந்தாவாக கிரேசி மோகன் நடித்திருந்தார்.

அபூர்வ சகோதரர்கள்: சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில் கமல்ஹாசன், ஜெய்சங்கர், நாகேஷ், கௌதமி, ரூபிணி, மனோரமா மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் அபூர்வ சகோதரர்கள். இப்படத்தில் உரையாடல்களை கிரேசி மோகன் எழுதி இருந்தார். இப்படத்தில் அப்பு கதாபாத்திரத்தில் கமல் குள்ளமாக நடித்திருந்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இப்படத்தில் கார் உரிமையாளராக கிரேசி மோகன் சில காட்சிகளில் நடித்திருந்தார்.

மைக்கேல் மதன காமராஜன்: கமலஹாசன் நான்கு வேடங்களில் நடித்து வெளியான திரைப்படம் மைக்கேல் மதன காமராஜன். இப்படத்தின் வசனங்களை கிரேசி மோகன் எழுதியிருந்தார். இப்படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக ஊர்வசி, ரூபினி, குஷ்பு ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்தில் ப்ராவிஷன்ஸ் ஸ்டோர் உரிமையாளராக கிரேசி மோகன் நடித்திருந்தார்.

சதி லீலாவதி: பாலுமகேந்திரா இயக்கத்தில் கமல்ஹாசன், கோவை சரளா, ரமேஷ் அரவிந்த், கல்பனா ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் சதி லீலாவதி. இப்படத்தின் வசனகர்த்தா கிரேஸி மோகன். இப்படத்தில் கமலஹாசன் டாக்டர் சக்திவேல் கவுண்டராகவும் அவரது மனைவியாக கோவைசரலா பாண்டியம்மாள் கதாபாத்திரத்திலும் இணைந்து நடித்த காட்சிகள் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தது.

அவ்வை சண்முகி:கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் கமல்ஹாசன், மீனா, நாகேஷ், ஜெமினி கணேசன் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் அவ்வை சண்முகி. இப்படத்தில் பெண் வேடமிட்டு கமலஹாசன் நடித்த அவ்வை சண்முகி கதாபாத்திரம் ரசிகர்களை கவர்ந்தது. இப்படத்தின் கதை மற்றும் வசனத்தை கிரேசி மோகன் எழுதியிருந்தார்.

தெனாலி: கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் கமல்ஹாசன், ஜோதிகா, ஜெயராம், தேவயானி ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் தெனாலி. இப்படத்தின் உரையாடல்களை கிரேசி மோகன் எழுதி இருந்தார். இப்படம் ஆரம்பம் முதல் இறுதிவரை நகைச்சுவையாக எடுக்கப்பட்டிருந்தது.

பஞ்சதந்திரம்: கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்ரன், ரம்யா கிருஷ்ணன் மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் பஞ்சதந்திரம். நண்பர்கள் பெங்களூர் செல்லும் போது அங்கு ஒரு பிரச்சனையில் மாட்டிக்கொண்டு அதிலிருந்து எப்படி மீண்டு வருகிறார்கள் என்பதை நகைச்சுவையாக சொன்ன படம் பஞ்சதந்திரம். இப்படத்தின் வசனங்களையும் கிரேசி மோகன் எழுதி இருந்தார்.

வசூல்ராஜா எம்பிபிஎஸ்: சரண் இயக்கத்தில் கமல்ஹாசன், பிரபு, சினேகா, பிரகாஷ்ராஜ், நாகேஷ் மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் வசூல் ராஜா எம்பிபிஎஸ். இப்படத்தின் வசனகர்த்தா கிரேஸி மோகன். அதுமட்டுமல்லாமல் இப்படத்தில் பேராசிரியர் மார்க்கபந்துவாக கிரேசி மோகன் நடித்திருந்தார். கமலுக்கு பதிலாக இவர் பரிட்சை எழுதுவது என பல காட்சிகள் ரசிகர்களை ஈர்த்தது.

Next Story

- Advertisement -