விரைவில் உருவாகும் விக்ரம் 3.. இவர்தான் இயக்குனர் சஸ்பென்ஸை உடைத்த கமலஹாசன்

உலகநாயகன் கமலஹாசன் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடித்துள்ளார். ஏற்கனவே கமலஹாசன் விக்ரம் என்ற டைட்டிலுடன் ஒரு படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள விக்ரம் படம் வருகின்ற ஜூன் 3 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகயுள்ளது.

இப்படத்தில் விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் சிறப்பு தோற்றத்தில் சூர்யாவும் நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் பல சுவாரசியமான விஷயங்களை உள்ளடக்கி உள்ளார் லோகேஷ் கனகராஜ். இப்படத்தில் கமலின் தோற்றமே பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில் விக்ரம் படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ளதால் தற்போதே திரையரங்குகளில் டிக்கெட்டுகள் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. இந்நிலையில் சமீபத்தில் 75 ஆவது கேன்ஸ் திரைப்பட விழா நடைபெற்றது. இவ்விழாவில் உலக நாயகன் கமலஹாசன் பங்கு பெற்றார். அப்போது விக்ரம் படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டது.

அதை பார்த்த ரசிகர்கள் முதல் திரைப்பிரபலங்கள் அனைவரும் வியப்பில் ஆழ்த்தியள்ளனர். மேலும் படத்தை மிக விரைவில் பார்க்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடனும் உள்ளனர். இந்நிலையில் சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய கமலஹாசனிடம் விக்ரம் 3, இந்தியன் 2 இந்த இரண்டு படங்களில் முதலில் எந்த படம் முதலில் வெளியாகும் என கேள்வியை எழுப்பியுள்ளனர்.

அதற்கு பதிலளித்த கமல்ஹாசன் இந்தியன் 2 விரைவில் தொடங்கும், அதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறினார். மேலும் விக்ரம் 3 படத்தைப் பற்றி லோகேஷ் தான் முடிவு செய்ய வேண்டும் என கூறினார். ஏனென்றால் அப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தான் என்று நான் முடிவு செய்துவிட்டதாக கமல்ஹாசன் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

இதனால் கண்டிப்பாக விக்ரம் 3 படம் உருவாகும் என்ற மகிழ்ச்சியில் கமல் ரசிகர்கள் உள்ளனர். லோகேஷ் கனகராஜ் விஜய்யின் 67 வது படத்தை அடுத்ததாக இயக்க உள்ள நிலையில் இப்படம் முடிந்த பிறகு மீண்டும் கமலஹாசனுடன் லோகேஷ் இணைவார் என்பது தற்போது இதன் மூலம் உறுதியாகியுள்ளது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்