Tamil Cinema News | சினிமா செய்திகள்
சார்பட்டா படத்திற்கு முதல் விமர்சனம் கொடுத்த கமலஹாசன்.. பிறந்தநாள் பரிசா,ஆப்பானு குழம்பிப் போன ஆர்யா!
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர் ஆர்யா. இவர் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் படம் நடித்தாலும் இவருக்கு தமிழில் தான் அதிக படங்கள் வெற்றி அடைந்துள்ளன. அதுமட்டுமில்லாமல் ஆர்யா ஹீரோவாக நடித்ததை விட திரைத்துறை நண்பர்களுக்காக அவர்களது படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்து பல படங்களும் வெளியாகியுள்ளன.
நடிகர் ஆர்யா கஜினிகாந்த் படத்தின் மூலம் சாயிஷா உடன் ஜோடியாக நடித்தார். ஆனால் இவர்கள் இருவருக்கும் காதல் மலர திருமணம் செய்து கொண்டனர். அதன்பிறகுதான் ஆர்யா நல்ல கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் மகாமுனி மற்றும் காப்பான். காப்பான் படத்தில் ஆர்யாவும் அவரது மனைவியுமான சாயிஷா இணைந்து பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

kamal haasan
சமீபகாலமாக ஆர்யாவுக்கு எந்த ஒரு படங்களும் பெரும் அளவில் பெயரை பெற்றுத் தரவில்லை. அதனால் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள சார்பட்டா திரைப்படத்தை முழுவதுமாக நம்பி உள்ளார். ஏனென்றால் பா ரஞ்சித் இயக்கிய அனைத்து படங்களும் வசூல் ரீதியாக வெற்றி அடைந்ததை விட விமர்சன ரீதியாக வெற்றியடைந்துள்ளன.

arya
கமலஹாசன் சார்பட்டா திரைப்படத்தை பார்த்து ஆர்யாவை பாராட்டியுள்ளார். மேலும் இப்படம் கண்டிப்பாக உங்களுக்கு பெயரை பெற்றுத் தரும் என கூறியுள்ளார். இதனால் உற்சாகம் அடைந்த ஆர்யா அவரது ட்விட்டர் பக்கத்தில் என்னுடைய ” பிறந்தநாள் கிப்ட்” இதை விட வேறு எதுவும் இல்லை என பதிவிட்டுள்ளார்.
நாளை பிறந்தநாள் கொண்டாட உள்ள ஆர்யாவிற்கு இப்போதே பிறந்தநாள் கிப்ட் வந்த வண்ணம் உள்ளன. எது எப்படியோ பிரித்துப் பார்த்தால் தான் தெரியும் கிப்ட்டா-ஆப்பானு.
