பிக்பாஸ் நிகழ்ச்சியை தூக்கி சாப்பிட்ட சன் டிவி.. டி ஆர் பியின் முதல் இடத்தை பிடித்த பிரபல சீரியல்

ஒவ்வொரு சீசனும் விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்படுகிறது என்றாலே மற்ற தொலைக்காட்சிகள் மிகுந்த அச்சத்தில் இருப்பார்கள். ஏனென்றால் எல்லா தொலைக்காட்சி தொடர்களில் உள்ள ரசிகர்களும் பிக் பாஸ் ஒளிபரப்பாகிற நேரமென்றால் மக்கள் மொத்தமாக விஜய் டிவி பக்கம் வந்து விடுவார்கள்.இதனால் விஜய் டிவி டிஆர்பி ரேட்டிங்ல் முதலிடத்தில் இருக்கும்.

இதனால் சன் டிவி மற்றும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் புதிய நிகழ்ச்சியை இறக்கி இருந்தது. ஜீ தமிழில் சர்வைவர் நிகழ்ச்சியை ஆரம்பித்து ஆக்ஷன் கிங் அர்ஜுன் தொகுத்து வழங்க செய்தது. ஆனால் இந்த நிகழ்ச்சி ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கவில்லை. அதேபோல் சன் டிவியும் மாஸ்டர் செப் என்ற தமிழ் நிகழ்ச்சியை ஆரம்பித்து மக்கள் செல்வன் விஜய் சேதுபதியை தொகுத்து வழங்க செய்தது. இந்த நிகழ்ச்சியின் எதிர்பார்த்தபடி போகவில்லை.

பெரும்பாலான இல்லங்களில் சன் டிவி தொடர்களை மக்கள் விரும்பி பார்ப்பார்கள். ஆனால் சமீபகாலமாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாரதிகண்ணம்மா தொடர் டி ஆர் பி இல் முதல் இடத்தைப் பிடித்து வருகிறது. இத்தொடரை தொடர்ந்து பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி தொடர்கள் அடுத்தடுத்த இடத்தைப் பிடித்திருந்தது.

இதனால் சன் டிவியின் டிஆர்பி உயர்த்துவதற்காக 8 மணிக்கு ரசிகர்கள் அதிகம் விரும்பிப் பார்க்கும் பூவே உனக்காக தொடரை பிக்பாஸ் ஒளிபரப்பு செய்யப்படும் அதே நேரத்தில் 10 மணிக்கு மாற்றம் செய்யப்பட்டது. பூவே உனக்காக தொடரில் பிக் பாஸ் சீசன் 5 இல் போட்டியாளராக கலந்து கொள்வார் என ரசிகர்கள் அதிகமாக எதிர்பார்த்த முகமது ஆசீம் இத்தொடரில் கதாநாயகனாக நடிக்கிறார்.

அவருக்கு ஜோடியாக ராதிகா ப்ரீத்தி நடித்து வருகிறார். இவர்களது காமினேஷன் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் மற்றொரு ஹீரோயினாக நடிகை சாயா சிங்கை சன் டிவியில் இறக்கியுள்ளது. தெலுங்கில் சூப்பர் ஹிட் சீரியலை கொடுத்த கார்த்திக் பூவே உனக்காக தொடரை இயக்குகிறார்.

இதனால் கடந்த இரண்டு வாரங்களாக பிக்பாஸ் நிகழ்ச்சியை பின்னுக்குத் தள்ளி பூவேஉனக்காக தொடர் டி ஆர் பி யில் முதலிடத்தை பிடித்து வருகிறது. இதனால் சன் டிவி போட்ட பிளான் பக்காவாக வேலை செய்துள்ளது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்