கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விக்ரம். கமலஹாசனின் தீவிர ரசிகர் லோகேஷ் கனகராஜ் என்பதால் படத்தில் கமல்ஹாசனுக்கு என மாசான காட்சிகள் வைத்திருப்பார். அதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
கமல்ஹாசன் கிட்டத்தட்ட நான்கு வருடங்களாக தனது குரலில் எந்த ஒரு பாடலை வெளியாகாமல் இருந்தது. தற்போது அனிருத் கமல்ஹாசனை வைத்து விக்ரம் படத்தில் பத்தல பத்தல எனும் பாடலைப் பாட வைத்துள்ளார். இதனால் இப்பாடலுக்கு நல்ல எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இப்பாடலில் கமல்ஹாசன் நடனமாடியுள்ளார். தன்னுடன் இருக்கும் கேங்ஸ்டர் உடன் சேட்டை செய்யும் கமலஹாசன் அவர்களுடன் நடனம் ஆடுகிறார்.. தற்போது கமல்ஹாசன் குரலில் வெளியான இப்பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.