வியாழக்கிழமை, பிப்ரவரி 13, 2025

படக்குழுவை அசர வைத்த கமல் ஹாசன்.. விக்ரம் படத்தை பற்றி கூறிய லோகேஷ் கனகராஜ்

தமிழ் சினிமாவில் உலக நாயகன் என அழைக்கப்படுபவர் கமல்ஹாசன். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்துமே வித்தியாசமான கதைகளை மையமாகக் கொண்டிருக்கும் மற்ற நடிகர்களை போல மாஸ் படங்கள் மட்டும் செய்து கொண்டு இருக்காமல் வித்தியாசமான கதைகளையும் வித்தியாசமான கதாபாத்திரம் ஏற்று நடிப்பது இவருடைய தனித்துவமான வழக்கம்.

தற்போது வரை நடிப்பு என்றாலே சிவாஜிகணேசனுக்கு அடுத்து அனைவருக்கும் ஞாபகம் வருவது கமலஹாசன் மட்டும் தான் ஏனென்றால் இவர் ஏற்று நடித்த கதாபாத்திரங்களை வேறு எந்த ஒரு நடிகராலும் நடிக்க முடியாது அந்த அளவிற்கு வித்தியாசமான கதாபாத்திரம் அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்ற குரல் என அனைத்திலும் அசத்தி இருப்பார். உதாரணத்திற்கு தசாவதாரம் படத்தில் 9 கதாபாத்திரத்திற்கும் 9 விதமான குரல் கொடுத்து ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்து இருப்பார்.

அந்தளவிற்கு கமல்ஹாசனின் நடிப்பு உலக அளவில் பிரபலம் அடைந்துள்ளது. சமீபகாலமாக கமல்ஹாசன் இதுவரைக்கும் நடிக்காத ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டுமென தனக்கு வந்த வாய்ப்புகளை நிராகரித்து வித்தியாசமான கதாபாத்திரத்திற்காக காத்துக் கொண்டிருந்தார். இவர் எதிர்பார்த்தபடியே லோகேஷ் கனகராஜ் ஒரு வித்தியாசமான கதையை கமல்ஹாசனுடன் கூறி சம்மதம் வாங்கினார்.

லோகேஷ் கனகராஜ் கமல்ஹாசனின் தீவிர ரசிகர். இவர் ஒரு மேடையில் வெறும் கமல்ஹாசனின் படங்களில் மட்டுமே பார்த்து தனக்கு இயக்குனர் ஆக வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டதாகவும் நான் இதுவரைக்கும் எந்த ஒரு இயக்குனரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியதே கிடையாது ஆனால் கமலஹாசனின் படங்களை எனக்கு போதும் படங்கள் இயக்குவதற்கு என வெளிப்படையாக தெரிவித்திருந்தார். அந்த அளவிற்கு கமல்ஹாசனின் படங்களை பார்த்து திறமையை வளர்த்துக் கொண்டதாக கூறினார்.

தற்போது கமல்ஹாசன் லோகேஷ் கனகராஜ் இயக்கும் விக்ரம் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் கமல்ஹாசனின் வித்தியாசமான கதாபாத்திரத்தை கொடுத்துள்ளதாக கூறியுள்ளார். மேலும் கமலஹாசனின் ஒவ்வொரு காட்சியிலும் அவரது நடிப்பு பெரிய அளவில் பேசப்படும் என கூறினார். இதுவரைக்கும் லோகேஷ் கனகராஜ் இயக்கிய படங்களைவிட இப்படத்திற்கு 4 மடங்கு உழைப்பை போட்டு உள்ளதாகவும் விக்ரம் படம் 4 படத்திற்கு சமம் எனவும் கூறியுள்ளார்.

அதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் இப்படத்தில் பகத் பாசில் மற்றும் விஜய் சேதுபதி உட்பட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இவர்கள் அனைவரையும் கமல்ஹாசன் எப்படி வீழ்த்துகிறார். மேலும் கமல்ஹாசன் நடிப்பில் பார்ப்பதற்காக ரசிகர்கள் இப்படத்தை எதிர்பார்த்துள்ளனர். இப்படத்தை ஏப்ரல் மாதத்தில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

Trending News