தமிழ் சினிமாவை மட்டும் தன் உயிராக நினைக்கும் நடிகர்களில் மிக முக்கியமானவர் உலகநாயகன் கமலஹாசன். சினிமா மட்டுமே இவருக்கு தொழில் வேறு எந்த தொழிலும் தெரியாது அளவிற்கு இன்று வரை உழைத்துக் கொண்டிருக்கிறார். வெற்றிப் படங்கள் குறைவாக இருந்தாலும், இவரது அர்ப்பணிப்புடன் புது புது முயற்சிகளை தமிழ் சினிமாவிற்கு கொண்டு வருவதில் இவருக்கு நிகர் இவரே. அவற்றில் சிலவற்றை இவற்றில் பார்ப்போம்.
விக்ரம்-1986: அன்றைய காலகட்டத்தில் நம் நிறைய திரைப்படங்களில் பார்த்திருப்போம் ரேடியோவில் டேப் ஓடுவது போல் இருக்கும் அதில் தான் பதிவு செய்வார்கள். அதனை மாற்றி கம்ப்யூட்டர் மூலம் சவுண்ட் பதிவு செய்வதை கொண்டு வந்தவர் கமல்.
தேவர் மகன்-1992: பொதுவாக எந்தப் படத்திலும் ஸ்கிரீன்பிளே கையில் எழுதும் காலகட்டம் அது. இதனை இந்த படத்தில் கமலஹாசன் அவர்கள் ஸ்கிரீன்பிளே ரைடிங் சாஃப்ட்வேர் என்ற கம்ப்யூட்டர் மூலம் திரைக்கதை எழுதும் பழக்கத்தினை தமிழ் சினிமாவிற்கு கொண்டு வந்தார்.
மகாநதி-1994: பழைய படங்களில் சாதாரணமாக படங்களை கட் செய்து தேவை இல்லாத சீன்களை தூக்கி எறிந்து விடுவார்கள். இதனை சரிசெய்ய கமலஹாசன் அவர்கள் இந்தப் படத்தில் Avid editing software என்ற ஒரு விஷயத்தை தமிழ் சினிமாவுக்கு கொண்டு வந்தவர் கமல்.
குருதிப்புனல்-1995: இந்த திரைப்படத்தில் நிறைய புதுமைகள் செய்திருந்தால் அதில் முக்கியமாக படத்தை பார்க்கும் போது கேட்கும் சவுண்ட் அதனை புதுமை படுத்தி Dolby stereo surround system என்ற புது டெக்னாலஜி அறிமுகப்படுத்தினார் கமல் அவர்கள்.
இந்தியன்-1996: இந்த திரைப்படத்தில் கமல் அவர்கள் வயதான தோற்றத்தில் எடுத்திருப்பார் மற்றும் சுகன்யா அவர்களும் வயதான தோற்றத்தில் நடித்து இருப்பார்கள். இந்த மேக்கப்பிற்கு பெயர் Prosthetic makeup இதனை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியவர் உலகநாயகன்.
விருமாண்டி-2004: இந்த திரைப்படத்தில் கமல் அவர்கள் ஆங்கிலத் திரைப்படத்தில் பயன்படுத்தப்படும் Live sound recording முறையை அதாவது டப்பிங் இல்லாமல் நேரடியாக நடிக்கும்போது பேசுவதை ரெக்கார்டு செய்யும் முறையாகும், இதனை கொண்டு வந்தவர் கமல்.
இதனைப் போல் இன்னும் கமல் நடித்த திரைப்படங்களில் அறிமுகப்படுத்தியுள்ளார். இன்றுவரை வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை என்றாலும் உலக நாயகன் அவர்கள் புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவதில் சிறு தயக்கமும் இன்றி இன்று வரை தொடர்ந்து கொண்டிருக்கிறார்