செவ்வாய்க்கிழமை, பிப்ரவரி 18, 2025

ரஜினி, விஜய், அஜித் பின்னுக்குத் தள்ளிய கமல்.. சகலகலா வல்லவனா சும்மாவா!

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது தமிழ் சினிமாவில் தவிர்க்கமுடியாத நடிகர் உலகநாயகன் கமலஹாசன். அதுமட்டுமல்லாமல் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றதில் முக்கிய பங்கு இவருக்கு உண்டு.

கமலஹாசன் நடிகர், திரைக்கதை எழுத்தாளர், இயக்குனர், தயாரிப்பாளர், பின்னணி பாடகர், பாடலாசிரியர், அரசியல்வாதி என பன்முகத்தன்மை கொண்டவர். கமல் ஐந்து முதல் ஆறு மொழிகளில் சரளமாகப் பேசக்கூடியவர்.

இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் சரளமாகப் பேசுவார். அதுமட்டுமல்லாமல் ஆங்கிலத்தில் பின்னி பெடல் எடுப்பார். வங்காளம் மற்றும் பிரெஞ்ச் மொழிகளும் கமலுக்கு தெரியும். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் நடித்த படங்கள் வெள்ளி விழா கண்டுள்ளது.

கமலஹாசன் மெட்ராஸ் பாஷையை சரளமாகப் பேசக்கூடியவர். அதுமட்டுமல்லாமல் மதுரை தமிழ், கோயமுத்தூர் தமிழ், திருநெல்வேலி தமிழ் என அனைத்து நடைமுறை பேச்சுக்களையும் பிசிறு தட்டாமல் பேசுவார்.

16 வயதினிலே படத்தில் கமலின் தோற்றமும், பாஷையும் பலரையும் வியக்கச் செய்தது. அதேபோல் பஞ்சதந்திரம் படத்தில் 5 நண்பர்கள் பேசும் பாஷையை கமல் பேசுவார். கமல் தன்னுடைய கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு தன்னுடைய உடல்மொழியை மாற்றிக் கொள்ளக் கூடியவர்.

தற்போது உள்ள பல நடிகர்களுக்கு இது யதார்த்தமாக வருவதில்லை. ஆனால் கமல் வாய்ஸ் மாடுலேஷனில் பின்னி பெடல் எடுப்பார். சினிமாவில் முன்னேற நினைக்கும் இளம் நடிகர்களுக்கு எடுத்துக்காட்டாக உள்ளார் உலகநாயகன் கமலஹாசன்.

Trending News