உதயநிதி ஸ்டாலினிடம் பஞ்சப்பாட்டு பாடிய தயாரிப்பு நிறுவனம்.. இந்தியன்-2 விற்கு வரும் சிக்கல்

நிதி நெருக்கடியால் 3 படங்களை ரிலீஸாவதற்கு முன்பே பிரபல தயாரிப்பு நிறுவனம் உதயநிதி ஸ்டாலினிடம் விற்றுள்ளது. உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில், மீண்டும் படப்பிடிப்பு தொடங்கவுள்ள இந்தியன் 2 திரைப்படத்தை இயக்குனர் ஷங்கர் இயக்குகிறார்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பே இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வந்த வேளையில், லைகா தயாரிப்பு நிறுவனம் 100 கோடிக்கு மேல் செலவழித்தது. ஆனால் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது பல பிரச்சனைகள் உருவானதால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

இதனிடையே உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்ததை அடுத்து, இந்தியன்2 திரைப்படத்தின் சூட்டிங்கிற்கு உலகநாயகன் கமலஹாசன் தயாராகி வருகிறார். இதனையடுத்து இப்படத்திற்கு மேலும் 120 கோடி செலவாகும் என்பதால் நிதி பற்றாக்குறையில் லைகா நிறுவனம் தவித்து வந்துள்ளது.

லைக்கா நிறுவனத்திடம் போதுமான பணம் இல்லாததால்  உதயநிதியிடம் பஞ்சப்பாட்டு பாடி இந்தியன் 2 எடுக்க திட்டம் போட்டு வருகின்றனர். அதாவது, லைகா நிறுவனம் தயாரிக்கும், ஷங்கரின் இந்தியன் 2, மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன், பொன்னியின் செல்வன் 2 உள்ளிட்ட திரைப்படங்களின் சாட்டிலைட் உரிமையை உதயநிதி ஸ்டாலினிடம் விற்க முடிவு செய்துள்ளனர்.

மேலும் அதில் வரும் பணத்தை வைத்து இந்தியன் 2 திரைப்படத்தின் மீதமுள்ள படப்பிடிப்பை எடுக்க லைகா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே சமீபத்தில் லைகா தயாரிப்பு நிறுவனத்தின் மூலமாக ரிலீஸ் செய்யப்படும் அனைத்து திரைப்படங்களின் திரையரங்கு உரிமைகளை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெய்ன்ட் தயாரிப்பு நிறுவனம் வாங்கி திரையரங்குகளுக்கு சப்ளை செய்யப்படுகிறது.

இதனிடையே சில திரைப்படங்களின் சாட்டிலைட் உரிமையை கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்ப உதயநிதி ஸ்டாலின் வாங்கி வருவதால், இந்த வருடத்தில் இந்தியன்2 திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்படும் என்றும் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்