Connect with us
Cinemapettai

Cinemapettai

indian2

Tamil Cinema News | சினிமா செய்திகள்

‘இந்தியன் 2’ எப்போது வெளியாகும்.. கமல் வெளியிட்ட மாஸ் அப்டேட்!

கமல் – ஷங்கர் கூட்டணியில் 1996 ஆம் வெளியாகி இந்திய சினிமாவையே திரும்பி பார்க்கவைத்த படம் ‘இந்தியன்’. இதில் இரட்டை வேடத்தில் கமல் நடித்து அசத்தியிருப்பார். கமலுக்கு ஜோடியாக சுகன்யா, மனிஷா கொய்ராலா, ஊர்மிளா ஆகியோர் நடித்திருந்தனர்.

ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டாக அமைந்தது. தற்போது 24 வருடத்திற்குப் பின் இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிவருகிறது. கமல் – ஷங்கர் கூட்டணியில் உருவாகி வரும் இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.

முதல் பாகத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தநிலையில் இரண்டாம் பாகத்திற்கு அவரை கழற்றிவிட்டு அனிருத்துடன் கைகோர்த்துள்ளார் ஷங்கர். கடந்த ஆண்டு படப்பிடிப்பு தளத்தில் கிரேன் விபத்து ஏற்பட்ட போது நிறுத்தப்பட்டது.

விபத்திற்குப் பின் இதன் படப்பிடிப்பு தொடங்கப்படவில்லை. மேலும் தயாரிப்பு தரப்புடன் ஏற்பட்ட மோதல் காரணமாக இந்தியன் 2 படத்தை கிடப்பில் போட்ட இயக்குனர் ஷங்கர், தெலுங்கு நடிகர் ராம்சரணை வைத்து புதிய படம் இயக்க தயாராகி வந்தார்.

indian-2-cinemapettai

indian-2-cinemapettai

இதனிடையே, இந்தியன் 2 படத்தை முடிக்காமல் வேறு படத்தை ஷங்கர் இயக்க தடை விதிக்க கோரி ஐகோர்ட்டில் லைகா நிறுவனம்மேல்முறையீடு செய்திருந்தது. இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதையடுத்து, இந்த உத்தரவை எதிர்த்து லைகா சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

இந்த விவகாரம் குறித்து எந்தவித கருத்தும் தெரிவிக்காமல் இருந்து வந்த கமல்ஹாசன், சமீபத்திய பேட்டியில், ‘இந்தியன் 2’ படத்தின் 60 சதவீத காட்சிகள் முடிவடைந்துள்ளது. இப்படத்தை சுற்றியுள்ள பிரச்சனைகள் கூடிய விரைவில் முடிக்கப்பட்டுவிடும். விக்ரம் படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் ‘இந்தியன் 2’ பட பணிகள் ஆரம்பிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார். கமலின் இந்த அப்டேட்டால் கோலிவுட் ரசிகர்கள் தற்போது சந்தோஷமடைந்துள்ளனர்.

Continue Reading
To Top