fbpx
Connect with us

Cinemapettai

சுபஸ்ரீ – தவறுகளைத் தட்டிக் கேளுங்கள்..! இளைஞர்களை ஊக்கப்படுத்தும் உலகநாயகன் வைரல் வீடியோ..

Videos | வீடியோக்கள்

சுபஸ்ரீ – தவறுகளைத் தட்டிக் கேளுங்கள்..! இளைஞர்களை ஊக்கப்படுத்தும் உலகநாயகன் வைரல் வீடியோ..

நடிகர் உலகநாயகன் “கமலஹாசன்” அவர்கள் திரைப்படங்களில் நடிப்பதை சமீபகாலமாக குறைத்துக்கொண்டு அரசியலில் கவனம் செலுத்தப் போவதாக கடந்த சட்டமன்ற இடைத்தேர்தலில் மக்கள் நீதி மையம் என்ற கட்சி பெயருடன் களத்தில் இறங்கினார். முதலுக்கு மோசமில்லை என்ற அளவுக்கு மக்களிடம் ஓரளவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது.

இந்நிலையில் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளராக களமிறங்கி, அந்த மேடையை அரசியலுக்காக பயன்படுத்தி வருகிறார். சமீபத்தில் பேனர் விழுந்து இறந்த சுபஸ்ரீ அவரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் அளித்தார்.

தளபதி விஜய்யின் சுபஸ்ரீ பற்றிய கருத்துக்கு நேரடியாகவே ஆதரவு அளித்திருந்தார்.இந்த அரசினை கண்டிக்கும் வகையில் சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் அலட்சிய கொலைகள் இன்னும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அதை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இரங்கல் மட்டுமே தெரிவித்துக் கொண்டு இருக்க முடியாது. இதை நிறுத்த வைப்பது நம் கடமை. அலட்சிய அதிகாரிகளும், அரைவேக்காட்டு அரசியல்வாதிகளாலும் இன்னும் எத்தனை உயிர்கள் பறிக்கப்பட இருக்கிறதோ தெரியவில்லை.

எதிர்த்து கேள்வி கேட்டால் ஏறி மிதிப்பது, தப்பை தட்டிக் கேட்டால் நாக்கை அறுத்து விடுவேன் என மிரட்டுவதும் தானே இன்றைய அரசியல். இது மாதிரியான ஆட்களின் மேல் மயிரிழை அளவு கூட மரியாதையும் பயமும் கிடையாது.

சாதாரண மக்கள் என்று சொல்லி சொல்லியே உங்களை அடிமையாக வைத்திருக்கிறார்கள். இந்த சாதாரண மக்கள்தான் அசாதாரணமான தலைவர்களை உருவாக்குகிறார்கள் என்று நான் நம்புகிறேன்” என்று தனது வீடியோவில் பதிவிட்டுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top