60 வருடகால உலகநாயகனின் அர்ப்பணிப்பு.. ஆண்டவருக்கு கிடைத்த அந்தஸ்து!

சினிமாவிற்கே தனது 60 கால வாழ்வை அர்ப்பணித்தவர் கமல். தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமலஹாசன் நடித்திருக்கும் விக்ரம் திரைப்படம் கடந்த ஜூன் மாதம் மூன்றாம் தேதி திரையிடப்பட்டு திரையரங்குகளில் வசூலில் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது.

தன்னுடைய 67ஆவது வயதிலும் விக்ரம் படத்தில் அவ்வளவு எனர்ஜியோடு, அந்தப்படத்தில் விக்ரம் கதாபாத்திரத்தில் மனிதன் வாழ்ந்திருக்கிறார். விக்ரம் படம் 4 நாளில் 100 கோடியை வசூலை தாண்டிவிடும் என்று கணிக்கப்பட்டு வருகிறது. அப்படி பார்த்தால் இந்த படம் மொத்த கலெக்ஷன் 350 கோடியைத் தாண்டிவிடும் என்றெல்லாம் கூறி வருகின்றனர்.

இவருக்கு உலகநாயகன் அந்தஸ்தை கொடுத்ததலிருந்து அது லாஜிக்காக நிரூபிக்கப்படாமல் இருந்தது. ஆனால் விக்ரம் படத்தால் 100 மற்றும் 200 சதவீதம் உண்மையாக மாறியது. இவர்தான் உலக நாயகன் என்று அனைவரும் பாராட்டி புகழின் உச்சத்திற்கே அவரைக் கொண்டு சென்றிருக்கின்றனர்.

உலக நாயகன் பெயர் பொருந்தக்கூடிய ஒருவர் என்றால் அது கமலகாசன் தான் என்றெல்லாம் மக்கள் இவரை தூக்கி வைத்துக் கொண்டாடி வருகின்றனர். முன்பு அஜித் விஜய் ரஜினி படங்கள்தான் பாக்ஸ் ஆபீஸில் சாதனை புரிந்து கொண்டிருந்த நிலையில் தற்போது உலக நாயகன் கமல் ஹாசன் நடித்திருக்கும் விக்ரம் படம் இதுவரை கமல் நடித்த படங்களில் விட வசூல் வேட்டையாடி அவர்களின் வரிசையில் கமலையும் இடம்பெற வைத்திருக்கிறது.

ராஜ் கமல் தயாரிப்பில் 120 கோடி பொருட்செலவில் எடுக்கப்பட்ட விக்ரம் திரைப்படம் கூடிய விரைவில் 500 கோடி வசூலில் உலக அளவில் ஈட்டும் என்று ஏற்கனவே திரைத்துறையினர் கணித்து வைத்திருக்கின்றனர். விக்ரம் படத்தில் மிரட்டலான நடிப்பை வெளிக்காட்டி இருக்கும் கமல், இந்தப் படத்தைப் பார்த்த பிறகு அவருடைய ரசிகர்கள் உலக நாயகன் கமலஹாசன் தான் என மார்தட்டிக் கொள்ளும் அளவுக்கு அட்டகாசமான நடிப்பை வெளிக் காட்டியிருக்கிறார்.

இது உலக நாயகனுக்கு கிடைத்த உண்மையான அந்தஸ்து தான். அத்துடன் நான்கு வருட இடைவெளிக்குப் பிறகு கமலை மீண்டும் திரையில் பார்ப்பதற்காக உலகநாயகனின் ரசிகர்கள் திரையரங்கை நோக்கி படை எடுத்து கொண்டிருப்பதால் நிச்சயம் அவர்களது கணிப்பு உண்மையாக அதிக வாய்ப்பிருக்கிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்