Tamil Nadu | தமிழ் நாடு
அனிதாவை வறுத்தெடுத்த கமல்.. ஆண்டவரிடமே வாக்குவாதமா?
விஜய் டிவியில் பிக் பாஸ் 4 நிகழ்ச்சி நாற்பது நாட்களை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. மேலும் நேற்று தீபாவளி பண்டிகை மிக விமரிசையாக கொண்டாடப்பட்டது.
மேலும் நேற்று வார இறுதி நாள் என்பதால் நேற்றைய எபிசோடில் கமல் பங்கேற்றதுமட்டுமல்லாமல், வாரம் முழுவதும் நடந்த நிகழ்வுகளைப் பற்றி கன்டஸ்டன்ட்களுடன் கலந்துரையாடினார்.
அந்தவகையில் அனிதாவின் செயல்களையெல்லாம் கவனித்த கமல் நேற்று அவரை வறுத்து எடுத்து விட்டார் என்றே கூறலாம். அதாவது கடந்த வாரம் அனிதா ரியோவை, ‘சாப்பிட மட்டும் தெரியுதுல.. என்ன சமைக்கட்டும்னு கேட்டா சொல்லத் தெரியாதா?’ என்று கடுமையாக பேசியிருந்தார். இதைப் பற்றி நேற்று கமல் ரியோவிடமும் அனிதாவிடமும் விசாரிக்க தொடங்கினார்.
அதுமட்டுமில்லாமல் அனிதா சீக்கிரமாக ரியாக்ட் ஆவதாகவும், விரைவில் கோப படுவதாகவும் குறிப்பிட்டார். இதனால் அனிதா தன்னை நியாயப்படுத்திக் கொள்ள கமலிடம் விவாதிக்க ஆரம்பித்தார்.
ஆனால் கமலோ அதை மறுத்து, ‘பாராட்டிய வாயால் தான் உங்க தப்பையும் எடுத்து சொல்றேன். அத ஏற்றுக்கொண்ட உங்களால இதை ஏத்துக்க முடியாதா? இதையும் நீங்க எடுத்துக்கிட்டு தான் ஆகணும்’ என்று கூறினார்.
எனவே, இவ்வாறு கமலிடமே அனிதா வாக்குவாதம் செய்ய முற்பட்டதை கண்ட பிக்பாஸ் ரசிகர்கள் பலர், ‘ஆண்டவர் கிட்ட உன் பருப்பு வேகாது’ என்று தங்களது கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

kamal-bigg-boss-anitha
