நடிகர் ரஜினிகாந்த் இன்று சென்னையில் தனது ரசிகர்களுடன் புகைப்படம் எடுக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார். அந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: தான் அரசியலுக்கு வரவேண்டும் என்று ரசிகர்கள் தினமும் கடிதம் மற்றும் போன் மூலமாக தெரிவித்து வருகின்றனர். ரசிகர்களின் கனவை நிறைவேற்ற விரைவில் நல்ல முடிவை அறிவிப்பேன் என்று மறைமுகமாக தெரிவித்தார்.

மதுரை மத்திய சிறைச்சாலையில் பாமக நிர்வாகியை சந்தித்துவிட்டு வெளியே வந்த அன்புமணி ராமதாசிடம் செய்தியாளர்கள் ரஜினி அரசியலுக்கு வருவது பற்றி உங்கள் கருத்து என்ன என்று  கேட்டனர்.

அது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது: கமல் மிகவும் தைரியமானவர், அவர் மனதில் பட்டதை செய்துவிடுவார். ஆனால் பல ஆண்டுகளாக திரைத்துறையினர் தமிழக மக்களை ஏமாற்றி வருகின்றனர்.

அதேபோன்று நடிகர்களுக்கு டூப் போடத்தான் தெரியும் அரசியலில் எடுபட மாட்டார்கள். இனியும் தமிழக மக்கள் ஏமாற மாட்டார்கள். நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து தெளிவாக கூற வேண்டும். அவர் சொல்வது புலி வருது புலி வருதுனு சொல்வது போன்று உள்ளது. அரசியலுக்கு வரவேண்டும் என்றால் நேரடியாக வரவேண்டும். இது போன்று கருத்து தெரிவிப்பது தேவையற்றது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.