முதல் படத்திலேயே விருது.. உச்சம் தொட்ட கமலின் சாதனைகள்

பத்ம பூஷன் கமல் ஹாசன் “” முதல் “விக்ரம்2” வரை சுமார் 220 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து இந்திய சினிமா வில் தனக்கென தனி அடையாளத்துடன் திகழ்கிறார். இதுவரை அவர் நடித்த திரைப்படங்களில் தற்போது வெளியாகிருக்கும் விக்ரம் 2 திரைப்படம் சில தினங்களில் மிகப்பெரிய வசூல் சாதனை நிகழ்த்தியுள்ளது.

உலகநாயகன் கமலஹாசன் அவர்கள் திரைத்துறையில் சிறந்த நடிகர், திரைப்பட தயாரிப்பாளர், திரைப்பட இயக்குனர், திரைக்கதையாசிரியர், பின்னணி பாடகர், பாடலாசிரியர் என பன்முகத் தன்மை கொண்டு விளங்குபவர். இதற்காக மத்திய அரசு மற்றும் தமிழகம் உட்பட தென்னிந்திய மாநில அரசுகளும் பல விருதுகளை வழங்கி கவுரவித்து உள்ளது.

சினிமாத்துறையில் 1960ஆம் ஆண்டு வெளியான களத்தூர் கண்ணம்மா என்ற திரைப்படத்தில் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். முதல் படத்திலேயே சிறந்து நடிப்பாற்றலை வெளிப்படுத்திய கமலஹாசன் ஜனாதிபதி கையால் விருது பெற்றார். . இதனைத் தொடர்ந்து 6 திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

பாலசந்தர் இயக்கத்தில் வெளிவந்த “அரங்கேற்றம்” என்ற திரைப்படமே இவர் நடித்த முதல் வாலிப வயது திரைப்படம். “கன்னியாகுமரி” எனும் மலையாள படமே முதல் முதலாக நாயகனாக நடித்து வெளியான திரைப்படமாகும். துணை நடன ஆசிரியராக தங்கப்பன் அவர்களிடம் சில திரைப்படங்கள் பணியாற்றியுள்ளார்.

அபூர்வராகங்கள், மூன்றாம் பிறை, நாயகன், இந்தியன், தேவர்மகன், தசாவதாரம், விஸ்வரூபம் உள்ளிட்ட 220 மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து வசூல் சாதனையை நிகழ்த்தியுள்ளார். தமிழ் சினிமாவை தவிர்த்து ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், வங்காளம் ஆகிய மொழிகளில் நடித்துள்ளார். அவர் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் அந்தந்த மாநில சக்கை போடு போட்டுள்ளது.

சமீபத்திய படங்களான வேட்டையாடு விளையாடு, தசாவதாரம், விஸ்வரூபம் 1&2, பாபநாசம் உள்ளிட்ட படங்கள் வசூலை வாரி குவித்து இருந்தாலும் அவற்றை அவரின் திரைப்படம் விகரம்2 முறியடித்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இப்படம் வெளியான சில தினங்களில்  நூறு கோடியை குவித்துள்ளது. விக்ரம் 2 திரைப்படம் அவரது கலைப் பயணத்தில் ஒரு மைல்கல்லாக அமைந்துள்ளது.

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்