Connect with us
Cinemapettai

Cinemapettai

bigg-boss-4

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தீபாவளியயும் விட்டு வைக்காமல் வீட்டைக் கொளுத்தி போட்ட பிக் பாஸ்.. அதுவும் கமலை வச்சே சிறப்பா முடிச்சுட்டாரு! 

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிக் பாஸ் 4 நிகழ்ச்சியில் நேற்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. மேலும் நேற்று வார இறுதி நாள் என்பதால் கமலும் இதில் கலந்து கொண்டார்.

இந்த நிலையில் நேற்று பிக் பாஸ், கமலை வைத்து வீட்டைக் கொளுத்தி போட்டிருக்கும் சம்பவம் பிக்பாஸ் ரசிகர்களுக்கு பெரும் தீனியாக அமைந்தது.

அதாவது நேற்றைய எபிசோடில் கமல் ‘இங்குள்ள பட்டாசுகளின் குணாதிசியம் யாருக்கு பொருந்தி இருக்கிறது என நீங்கள் பொருத்தி வைக்க வேண்டும்’ என்ற டாஸ்க்கை கொடுத்தார்.

அந்தவகையில் ஒவ்வொருவராக வந்து குழுவாக கலந்துரையாடி மற்றவருக்கு ஒரு பட்டாசு வகையை கொடுத்தனர்.

அதன்படி வீட்டிலுள்ளவர்கள் மற்றவர்களுக்குக் கொடுத்த பட்டாசு  வகைகள் இதோ:

  • பாலாஜி- ராக்கெட் வெடி
  • கேப்ரில்லா- சங்கு சக்கரம்
  • சனம் ஷெட்டி- துப்பாக்கி
  • சம்யுக்தா- புஸ்வாணம்
  • சுசித்ரா- பாம்பு மாத்திரை
  • அனிதா- சரவெடி
  • ரம்யா- கம்பி மத்தாப்பு
  • அர்ச்சனா- வானவெடி
  • சிவானி- ஊசி வெடி
  • ஆரி- வெங்காய வெடி
  • சோம் சேகர்- பொட்டு வெடி
  • நிஷா- லக்ஷ்மி வெடி
  • ரியோ- அணுகுண்டு
  • ஆஜித்- ஊதுபத்தி
  • ஜித்தன் ரமேஷ்- டபுள் ஷாட் வெடி

எனவே பிக்பாஸ் வீட்டில் உள்ள கன்டஸ்டன்ட்களுக்கு டாஸ்கை கொடுத்து  பிக்பாஸ் ரசிகர்கள் பலரை புதுவிதமான முறையில் என்டர்டைன்  செய்திருக்கும் இந்த எபிசோடு பலரால் பேசப்பட்டு வருகிறது.

rio-bigg-boss

rio-bigg-boss

Continue Reading
To Top