kamal-devarmagan2
kamal-devarmagan2

2019 தேர்தல் களத்தில் தனி சாம்ராஜ்யம் அமைக்கப் போகும் மக்கள் நீதி மையம்!

கமலின் அரசியல் சாம்ராஜ்யம் தொடங்கப்பட்டுள்ளது. அதற்கு மக்கள் நீதி மையம் என்று பெயரிட்டு பலவிதமான மக்கள் பிரச்சினைகளை எடுத்துரைக்கப்படுகிறது. இதில் முக்கியமாக கஜா புயலில் பாதிக்கப்பட்ட மக்களை கமல் நேரில் சென்று அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறார்.

வரும் நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பாக போட்டியிட உள்ளதாக கமல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து இந்தியன் 2 படம் டிசம்பர் 14ஆம் தேதி தொடங்க உள்ளதாகவும் அது முடிந்தபின் வேறு எந்தப் படத்திலும் நடிக்கப் போவதில்லை என்றும் கூறியுள்ளார்.

அதிகம் படித்தவை:  கமல்ஹாசனுக்கு அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழகம் அழைப்பு!

கேரளாவில் நடைபெற்ற ஒரு விழாவில் கலந்துகொண்ட கமல் தன்னுடைய கட்சிப் பணிகள் நிறைய இருப்பதால் இந்தியன் 2 படத்திற்கு பின் நடிக்கப்போவதில்லை என்றும் தேவர் மகன் இரண்டு எடுக்கப் போவதில்லை என்று கூறியுள்ளார். இது அவர் ரசிகர்களிடையே மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.

அதிகம் படித்தவை:  கழட்டிவிட்ட கமல்! ஆடியோ விழாவில் ஒரு பஞ்சாயத்து
Kamalhassan
Kamalhassan

வரும் 2019ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தேர்தலில் மக்கள் நீதி மையம் கண்டிப்பாக போட்டியிடும். இதன்மூலம் என்ன தெரிகிறது என்றால் ஒன்றை இழந்தால்தான் மற்றொன்றை அடைய முடியும் என்ற குறிக்கோளில் கமல் தனது அரசியல் பாதையை பலப்படுத்தி வருகிறார்.

ஒடிசா மற்றும் கேரள முதலமைச்சர்களை சந்தித்ததாகவும் அங்குள்ள திட்டங்களை தமிழகத்திற்கும் பயன்படும் விதமாக கொண்டு வருவோம் என்று அவர் பேட்டியளித்துள்ளார்.