பழைய காதலனை பார்க்கும் ஆசையில் டிம்பிள் கபாடியா.. விக்ரம் படத்தில் கமல் எடுக்கும் புது அவதாரம்

தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமலஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் விக்ரம். இப்படம் வருகிற ஜூன் 3 ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் கமலஹாசன் 1986இல் ராஜசேகர் இயக்கத்தில் விக்ரம் என்ற படத்தில் நடித்திருந்தார்.

இப்படம் அப்போதே பிரம்மாண்டத்திற்கு பஞ்சமில்லாமல் எடுக்கப்பட்டிருந்தது. ஏனென்றால் அப்போதைய காலகட்டத்திலேயே ஒரு கோடி பட்ஜெட்டில் இப்படம் எடுக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகத்தை தான் லோகேஷ் கனகராஜ் இயக்குகின்றார் என்ற பேச்சு அடிபட்டது.

அதற்குக் காரணம் படத்தின் டைட்டிலும், இப்படத்தின் தீம் மியூசிக்கும் ஒரே மாதிரி இருந்தது . மேலும் இப்படத்தில் விக்ரம் ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரியாக உள்ளார் என்ற தகவலும் வெளியாகி இருந்தது. ஆனால் விக்ரம் படத்தின் இரண்டாம் பாகம் இது இல்லை என படக்குழு உறுதி செய்தது.

ஆனால் அப்போது கமலஹாசன் இளமை காலத்தில் நடித்த விக்ரம் படத்தில் அம்பிகா, டிம்பிள் கபாடியா, சத்யராஜ், ஜனகராஜ் மற்றும் பலர் நடித்திருந்தனர். இதில் கமல் நடித்த விக்ரம் கதாபாத்திரத்தை இரண்டு பேர் உருகி உருகி காதலிப்பார்கள். அதில் ஒருவர்தான் பாலிவுட் நடிகை டிம்பிள் கபாடியா.

இப்படத்தில் இவர் இளவரசி இனிமாசியாக நடித்திருந்தார். இந்நிலையில் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள விக்ரம் படத்தில் பழைய படங்களில் உள்ள இளமை தோற்றத்தில் கமல் உள்ளாராம். மேலும் இதற்காக 10 கோடி செலவு செய்துள்ளார்களாம்.

இந்நிலையில் கிட்டத்தட்ட 36 ஆண்டுகள் கழித்து அதே தோற்றத்துடன் உள்ள கமலை பார்க்க டிம்பிள் கபாடியா ஆர்வமாக இருக்கிறாராம். மேலும் கமல் ரசிகர்களுக்கும் இது மிகப்பெரிய ஆவலாக தான் இருக்கிறது. ஏனென்றால் கமல் பல கெட்டப்புகளில் போட்டு பார்த்து இருக்கிறோம் ஆனால் தன்னுடைய இளமைக் காலத்திலேயே அப்படியே பிரதிபலிப்பது இதுவே முதல் முறையாகும்.

Next Story

- Advertisement -