குருவிற்கு கூட நன்றி கடன் செலுத்த முதுகு எலும்பு இல்லாத கமல்.. இந்த விஷயத்தில் ரஜினி எவ்வளவோ பரவாயில்ல!

Kamalhassan and Rajinikanth: தற்போதைய சினிமாவில் சூப்பர் ஸ்டார் மற்றும் உலகநாயகன் என்ற பட்டத்துடன் இரு துருவங்களாக ரஜினி மற்றும் கமல் ஜொலித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆரம்பத்தில் கிடைக்கிற சின்ன சின்ன கதாபாத்திரத்திலும், நெகட்டிவ் கேரக்டரிலும் நடித்து வந்த இவர்களுக்கு ஆஸ்தான குருவாக இருந்து கை கொடுத்து தூக்கி விட்டவர் தான் கே பாலச்சந்தர். இவர்களை மட்டும் இல்லாமல் இன்னும் பல பேரை அறிமுகப்படுத்தி இருக்கிறார்.

அத்துடன் 9 தேசிய விருதுகள் வென்ற கே.பாலசந்தருக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ மற்றும் தாதா சாகேப் பால்கே விருது ஆகியவற்றை வழங்கி கௌரவித்தது. அப்படிப்பட்ட இவர் உடல்நிலை குறைவால் ரொம்பவே அவதிப்பட்டு பல வழிகளில் சோதனைகளையும் சந்தித்து இருக்கிறார். அந்த நேரத்தில் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, கே பாலச்சந்திரரை நேரில் பார்த்து பேசி இருக்கிறார்.

அப்பொழுது அவரிடம் இருந்த மனக்குறைகள் அனைத்தையும் கொட்டி தீர்த்து பேசி இருக்கிறார். அத்துடன் பண நெருக்கடியில் இருப்பதையும், என்னுடைய மகன் ரொம்ப கடனாளியாகி விட்டான். என்னால முடியல என்று ரொம்பவே கதறி இருக்கிறார். அதற்கு தாணு உங்க சிஷ்யன் ரஜினியிடம் உதவி கேட்கலாம் என்று சொல்லி இருக்கிறார்.

Also read: இவர்தான் அடுத்து ரஜினியின் இடத்தை பிடிக்கப் போகிறார்.. கே பாலச்சந்தர் கைகாட்டிய அந்த நடிகர் யார் தெரியுமா.?

அதற்கு கே பாலச்சந்தர் அதெல்லாம் வேண்டாம், அவர் எவ்வளவோ உதவி பண்ணி இருக்கிறார். மறுபடி மறுபடி அவர்கிட்ட உதவி கேட்க ஒரு மாதிரியாக இருக்கிறது. சோ வந்து கூட என்னை பார்த்துட்டு நான் ரஜினி கிட்ட ஏதாவது பேசவா என்று கேட்டார். அவரையுமே நான் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். ஏனென்றால் எவ்வளவோ உதவி ரஜினி செய்து விட்டார். அதுவே எனக்கு போதும் என்று கே. பாலச்சந்தர் கூறியிருக்கிறார்.

அடுத்ததாக தாணு, ஆழ்வார்பேட்டையில் இன்னொரு சிசியன் ( கமல் ) இருக்கிறார் தானே அவர்கிட்ட போய் உதவி கேட்க வேண்டியது தானே என்று சொல்லி இருக்கிறார். அதற்கு அவனை எல்லாம் பற்றி பேசாத, அப்படி ஒரு உதவி எனக்கு தேவையில்லை, அதற்கு நான் செத்தே போயிருவேன் என்று கே பாலச்சந்தர் சொல்லியிருக்கிறார். ஏனென்றால் எவ்வளவோ சிக்கலில் இருப்பதை தெரிந்தும் கூட கொஞ்சம் கூட வந்து எட்டிப் பார்க்கவில்லையாம்.

அந்த வேதனையில் கே.பாலச்சந்தர் கமலிடம் உதவி பெறுவதை கேவலமாக நினைத்திருக்கிறார். எப்படி இருந்தாலும் ஒரு குருவிற்கு நன்றி கடன் செலுத்துவது ஒரு சிசியினுடைய கடமை. அதைக்கூட செய்ய முடியாத அளவிற்கு கமல் ஒரு கல்நெஞ்சம் மனசு படைத்தவராக இருந்திருக்கிறார். அதுவும் கே பாலச்சந்தர் மூலமாகத்தான் கமல் சினிமா கேரியரில் ஜெயிக்க முடிந்தது. அப்படிப்பட்ட குருவை மறந்து முதுகெலும்பு இல்லாதவராக கமல் இருந்திருக்கிறார். இதை பார்க்கும் பொழுது ரஜினி எவ்வளவோ பரவாயில்லை என்பது போல் தெரிகிறது.

Also read: பொறுத்தது போதும்னு பொங்கி எழுந்த எச் வினோத்.. வெட்டு ஒன்னு துண்டு ரெண்டுன்னு பேச முடியாத கமல்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்