Tamil Cinema News | சினிமா செய்திகள்
அரசின் முதல் அடி ஆரம்பம்! கமல் நற்பணி இயக்க பொறுப்பாளர் கைது!
கமல் இப்படியெல்லாம் குறுக்கே புகுந்து குடைச்சல் கொடுப்பார் என்று அதிமுக வினர் ஒருபோதும் நினைத்திருக்க மாட்டார்கள். இந்த நேரத்தில் அவரது குரல் வளையில் கை வைக்காவிட்டால், கச்சேரியை நிறுத்த முடியாது என்று முடிவுக்கு வந்திருப்பார்கள் போலிருக்கிறது.
கிட்டதட்ட ஆறியே போன ஒரு விவகாரத்தை கிளற ஆரம்பித்துவிட்டது அரசு. ஜல்லிக்கட்டு சமயத்தில் கமலும் அவரது ரசிகர்களும் போட்ட ட்விட் மற்றும் கருத்துக்களை இப்போது அலசி ஆராய்ந்து அதன் மேல் நடவடிக்கை எடுக்க கிளம்பிவிட்டது போலீஸ். முதல் கட்டமாக கமல் நற்பணி இயக்கத்தின் புதுக்கோட்டை பொறுப்பாளர் சுதாகர் கைது செய்யப்பட்டிருக்கிறார். அதுவும் ஜாமீனில் வெளிவர முடியாத வழக்கில்!
இதையடுத்து காலையில் இருந்து வரிசையாக ட்விட் போட்டுக் கொண்டிருக்கும் கமல், அதில் கூறுகிற… அதாவது பொங்குகிற வார்த்தைகள் இதுதான். TN ஜ.கட்டுப் போராட்டத்தில் எமதியக்கத்தின் சுதாகரும் சிலரும் நேற்று கைது. இது எமதுபெருமையைக் கூட்டவும் அரசியல் வன்மத்தைக் காட்டவும் செய்கிறது
இனி மக்கள் நீதி நாடுகாக்கும். நான் கீச்சிடாமல் அடிநாதத்துடன் அடக்கி வாசிக்கவே நினைத்தேன். ஆனால் எம் இயக்கப் பொறுப்பாளரின் கைது பேசவைக்கிறது.
நமதியக்கத்தார் சற்றதிகமாக கண்ணியம் காக்கும் நேரமிது. அளந்து பேசவும் தொடர்ந்து பேசவும். அரசுகள் மாறிமாறிவரினும் நம் கட்சியற்ற கொள்கைமாறாது.
எக்கட்சி அரசேற்றாலும் நம் பணி போதுநலம் காப்பதே. இக்கூலியில்லா வேலையை நம் ஆயுளுள்வரை செய்வோம். அவர் பலமுறை வருவா் போவர்.நிரந்தரம் நம்நாடு’.
அவர் கூறுகிற வார்த்தைகளில் சில புரிந்தும், சில புரியாமலும் இருந்தாலும், கமல் வேட்டியை வரிந்து கட்டிக் கொண்டு கிளம்பிவிட்டார் என்பது மட்டும் தெள்ளந்தெளிவாக புரிகிறது.
இனி தர்மயுத்தம்தான்!
சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.
