fbpx
Connect with us

Cinemapettai

கமலின் அதிமுக எதிர்ப்பும் 52 கோடி நஷ்டமும்!

Kamalhaasan-Vishwaroopam-Admk

கமலின் அதிமுக எதிர்ப்பும் 52 கோடி நஷ்டமும்!

எப்ப பார்த்தாலும் மு.க.ஸ்டாலின், ஓ. பன்னீர்செல்வம் என்று திட்டுவதற்கு ஒரே திசையை தேர்வு செய்து வைத்திருந்த சசிகலா அதிமுகவுக்கு சரியான பொழுதுபோக்காக சிக்கிவிட்டார் கமல். நாஞ்சில் சம்பத் தொடங்கி, மந்திரிமார்கள் வரை “கமலுக்கு பாடம் கற்பிக்க வேண்டும். அவர் நடிப்பதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். கமலுக்கு அறிவு வேண்டும். மூளை வேண்டும். கிட்னி வேண்டும்” என்றெல்லாம் கொக்கரிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

அதற்கு காரணம் கமல் சொன்ன ஒரு படீர் திடீர் விஷயம்தான். “ஆட்சிய உடனே கலைச்சுட்டு எலக்ஷன் வைக்கணும்” என்பது கமலின் கருத்து!

கமல் இவ்வளவு கோபப்பட என்ன காரணம்? ஒரு தனியார் தொலைக்காட்சியில் அவர் அளித்த பேட்டியில் புட்டு புட்டு வைத்தார் அந்த பிளாஷ்பேக்கை. “என்னுடைய விஸ்வரூம் படத்தின் போது இவங்க பண்ணுன பிரச்சனையால் எனக்கு 52 கோடி ரூபாய் நஷ்டம். எந்த முஸ்லீம் அமைப்பும் விஸ்வரூபத்திற்கு எதிரா பிரச்சனை செய்யல. இதே வீட்டில் எனக்காக அவங்க துவா பண்ணிட்டு போனாங்க. வேற வழியில்ல. நாங்க என்ன பண்ணுறது? என்றும் வருந்தினார்கள். முஸ்லீம் அமைப்புகளின் பெயரில் அன்றைக்கு பிரச்சனை செய்தது ஜெயலலிதாதான்” என்றார் துணிச்சலாக!

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top