fbpx
Connect with us

Cinemapettai

போதும் இந்த சினிமா என ஒதுங்கிய ரஜினி.. கமல் கொடுத்த ஷாக் பதில்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

போதும் இந்த சினிமா என ஒதுங்கிய ரஜினி.. கமல் கொடுத்த ஷாக் பதில்

தமிழ் சினிமாவில் 40 ஆண்டுகளுக்கு மேல் தங்கள் துறைகளில் முதலிடத்தில் இருந்து வருபவர்கள் ரஜினி மற்றும் கமல். ரசிகர்களைப் பொறுத்தவரை இவர்கள் போட்டியாளர்கள், ஆனால் அவர்களைப் பொறுத்தவரை ஒருவருக்கு ஒருவர் உயிரை கூட தரும் அளவுக்கு நண்பர்கள்.

சமீபத்திய பேட்டி ஒன்றில் ரஜினி பற்றிய சுவாரசியமான தகவல் ஒன்றை கமல் வெளியிட்டுள்ளார். கமல் கூறியதாவது, தாங்கள் ஆரம்பத்தில் இருந்து இணைபிரியாத நண்பர்களாக இருந்து வருகிறோம். இன்றும் எங்களது நட்பு அவ்வழியே தொடர்கிறது.

ஆனால் எங்களின் மீது கொண்ட தீரா ஆசையினால் ரசிகர்கள் பிரிந்துவிட்டனர். இதுகுறித்து நானும் ரஜினியும் பேசுவதை ஓபனாக சொன்னால் எங்களுடைய ரசிகர்கள் மட்டுமல்ல, மற்ற எவரையும் பிரித்துப் பார்க்க மாட்டார்கள் எனக் கூறினார்.

மேலும் ரசிகர்களின் சண்டை காரணமாக ரஜினி சினிமாவை விட்டு விலகப் போவதாக தன்னிடம் தெரிவித்ததாகவும், அதற்கு அப்படி எல்லாம் செஞ்சு தொலைச்சராத என உரிமையுடன் கோபப்பட்டதாகவும் தங்களது நட்பை அழகாக தெளிவுபடுத்தியுள்ளார்.

இருந்தாலும் ரசிகர்கள் சண்டை அன்றைக்கும் இன்றைக்கும் என்றைக்கும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். அவர்களே நினைத்தாலும் அதை சரி செய்ய முடியாது என்கிறது கோடம்பாக்கம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top