பிக் பாஸுக்கு எண்ட் கார்டு போட்ட இந்தியன் 2 ராசி.. எதிர்பாராததை எதிர்பார்க்க வைத்த ஆண்டவர்

Kamal: நேற்றிலிருந்து சோசியல் மீடியாவில் கமல் பற்றிய பேச்சு தான் பரபரப்பை கிளப்பிக் கொண்டிருக்கிறது. ஏழு வருடங்களாக பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த இவர் தற்போது அதிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இதற்கான காரணத்தை தான் ரசிகர்கள் ஆளுக்கு ஒன்றாக பேசி வருகின்றனர். கடந்த சீசனில் பிரதீப்புக்கு ரெட் கார்டு கொடுத்தது தான் முக்கிய காரணம் என ஒரு பக்கம் பேசப்பட்டு வருகிறது. ஏனென்றால் அந்த விவகாரம் தான் கமல் பெயரை ரொம்பவும் டேமேஜ் செய்தது.

அப்போதே இவர் நிகழ்ச்சியை விட்டு விலக வேண்டும் என ரசிகர்கள் போராட்டம் நடத்தாத குறையாக எதிர்ப்பை காட்டினார்கள். அதனால் ஆண்டவரின் இந்த அறிவிப்பு பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

அடுத்ததாக யார் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு மட்டுமே இருக்கிறது. இந்நிலையில் இந்தியன் 2க்கும் பிக் பாஸுக்கும் ஒரு பெரிய சம்பந்தம் இருக்கிறது. அதாவது முதல் சீசன் முடியும் போது தான் இந்தியன் 2 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

எதிர்பாராததை எதிர்பாருங்கள்

ஷங்கர் அந்த மேடையில் தான் இதை ரசிகர்களுக்கு அறிவித்தார். ஆனால் இதோ அதோ என்று பல பிரச்சனைகளால் அப்படம் ஏழு வருடம் இழுத்து அடித்து விட்டது. தற்போது படம் வெளியாகி மிகப்பெரிய அளவில் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகி விட்டது.

இந்த சமயத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு கமலும் வெளியேறி இருக்கிறார். ஒன்றும் ஒன்றும் இரண்டு என்ற கதையாக ரசிகர்கள் இதை முடிச்சு போட்டு பேச ஆரம்பித்து விட்டனர். இந்தியன் 2 படத்தின் ராசி ஆண்டவரை வச்சி செய்து விட்டது.

அதனால் தான் முதல் முறையாக ஒரு தொகுப்பாளர் எலிமினேட் செய்யப்பட்டு விட்டார் என கூறி வருகின்றனர். ஆனால் கமலுக்கு அடுத்தடுத்த படங்கள் கைவசம் இருப்பதால் அதில் கவனம் செலுத்தும் முடிவில் அவர் இருக்கிறார். இதன் மூலம் இருக்கும் பெயரையாவது காப்பாற்றிக் கொள்ளலாம் என்ற எண்ணம் தான்.

ஆண்டவரை எலிமினேட் செய்த விஜய் டிவி

Next Story

- Advertisement -