Tamil Nadu | தமிழ் நாடு
2021 சட்டமன்ற தேர்தலுக்கான போட்டியிடும் தொகுதியை தேர்வு செய்த கமல்! மக்கள் நீதி மய்யம் அதிரடி
தமிழ் சினிமாவில் உச்ச கதாநாயகனாக வலம் வருபவர் தான் உலக நாயகன் கமலஹாசன். இவர் தற்போது அரசியலின் மீது அதிக ஆர்வம் ஏற்பட்டு, அவருடைய ரசிகர்களின் ஒத்துழைப்புடன் “மக்கள் நீதி மய்யம்” என்ற கட்சியை தொடங்கியுள்ளார்.
மேலும் தனது காட்சிக்கான களப்பணிகளை செவ்வனே செயலாற்றி கொண்டிருந்த இந்த சூழலில், வரும் 2021ம் ஆண்டு நடைபெறப் போகும் சட்டமன்ற தேர்தலில் சென்னை மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிடப் போவதாக கமலஹாசன் தற்போது முடிவெடுத்துள்ளார்.
ஏனென்றால் தமிழகத்தில் சென்னையில் தான், மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு அதிக செல்வாக்கு இருப்பதாக அண்மையில் சர்வே ரிப்போர்ட் ஒன்றை தனியார் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
ஆகையால் அடுத்த ஆண்டு தமிழகத்தில் நடைபெறும் தேர்தலில் மக்கள் நீதி மையம் கட்சியும் போட்டியிட தயாராகிவிட்டதாக சமூக வலைதளங்களில் கமல் ரசிகர்கள் தெறிக்கவிடுகின்றனர்.
அதேபோல் உலகநாயகன் கமலஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியினை வலுப்படுத்துவதற்கு தேவையான எல்லா முயற்சிகளையும் செய்து வருகிறார்.

kamalahasan-cinemapettai
எனவே “வரும் தேர்தலில் தமிழகத்தில் இருக்கும் மற்ற கட்சிகளுக்கெல்லாம் கடும் போட்டியாக கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியும் இருக்கும்’ என்று பொதுமக்கள் தரப்பில் கிசுகிசுக்கப்படுகிறது.
