வேண்டாம்னு மறுத்த லோகேஷை இழுத்துவிட்ட கமல்.. கோர்த்துவிட்டு வேடிக்கை பார்க்கும் ஆண்டவர்

Actor Kamal : இப்போது கோடம்பாக்கத்தில் ஹாட் டாபிக்காக பேசப்படுவது இனிமேல் பாடல் பற்றி தான். சில தினங்களுக்கு முன் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் நடிகை ஸ்ருதிஹாசன் இருவரும் நடித்துள்ள இனிமேல் ஆல்பம் பாடலின் ப்ரோமோ வெளியாகி இருந்தது.

இந்தப் பாடலில் ஸ்ருதிஹாசன் உடன் ஓவர் ரொமான்ஸ் செய்திருந்தார். இதனால் லோகேஷை விமர்சித்து இணையத்தில் ட்ரோல் வெளியாக தொடங்கியது. இயக்குனராக ஒரு நல்ல அந்தஸ்துடன் லோகேஷ் இருந்து வந்தார்.

ஆனால் இப்போது தேரை இழுத்து தெருவில் விட்டது போல் லோகேஷ் இனிமேல் பாடலால் ட்ரோல் கண்டன்டாக மாறிவிட்டார். இதற்கெல்லாம் காரணம் கமல் தானாம். அதாவது கமல்தான் இந்த படத்திற்கு பாடல் வரிகளை எழுதிக் கொடுத்திருந்தார்.

கமலால் நடிக்க சம்மதித்த லோகேஷ்

மேலும் பாடலின் கான்செப்ட் ஸ்ருதி சொல்லும்போது லோகேஷ் சற்ற விருப்பமில்லாமல் இருந்துள்ளார். அதன் பிறகு கமல் தான் லோகேஷை இதில் கண்டிப்பாக நடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

ஆண்டவர் பேச்சுக்கு மறுப்பு சொல்லாமல் லோகேஷ் பாடலில் நடித்து கொடுத்துள்ளார். அதோடு ப்ரோமோவே படு பயங்கரமாக இருந்த நிலையில் இன்று முழு பாடலும் வெளியாக இருக்கிறது. இதனால் லோகேஷ் என்னென்ன பிரச்சனை சந்திக்கப் போகிறாரோ.

போதாக்குறைக்கு ஐபிஎல் மேட்ச்க்கு லோகேஷ் ஸ்ருதிஹாசனுடன் சென்றதால் அதுவும் புகைய தொடங்கியது. இருவரையும் சேர்த்து வைத்து இணையத்தில் கிசுகிசுக்கள் வெளியாகி வருகிறது.

ஆக்சன் படங்களை கொடுத்து கெத்தாக சுற்றி வந்த லோகேஷுக்கு இப்படி ஒரு நிலைமை என்பது போல தான் இருக்கிறது. தன்னுடைய மகளின் பாடல் ஹிட்டாக வேண்டும் என்பதற்காக லோகேஷை கோர்த்துவிட்டு வேடிக்கை பார்த்துள்ளார் ஆண்டவர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்