Tamil Cinema News | சினிமா செய்திகள்
பாகுபலியை கழுவி கழுவி ஊத்திய கமல்..!!! பாகுபலி மீது அப்படி என்ன கோபம்?
கமல்ஹாசன் தமிழ் சினிமாவின் புதிய முயற்சிகளை எடுத்து வருபவர். இவர் விரைவில் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ரியாலிட்டி ஷோ ஒன்றை தொகுத்து வழங்கவுள்ளார்.
இந்நிலையில் இவர் சமீபத்தில் தமிழகத்தின் முன்னணி வார இதழ் ஒன்றில் பேட்டியளித்துள்ளார். இதில் ‘ஹேராம் படம் தற்போது வந்திருந்தால் ஹிட் ஆகியிருக்கும் என்று நினைக்கிறீர்களா?’ என்று கேட்டுள்ளனர்.
அதற்கு கமல் ‘அவ்வளவு முன்னோடியாக எந்த மனிதனாலும் இருக்க முடியாது. அது அப்போது வரணும். வந்திருக்கிறது. அப்படியென்றால், ‘பாகுபலி’ 30 வருடங்களுக்கு முன் வரவேண்டிய சினிமா எனச் சொல்லலாமா? அதில் வந்த எல்லா கதைகளையும் ‘அம்புலிமாமா’வில் பார்த்திருக்கிறோம்; மகாபாரதத்தில் பார்த்திருக்கிறோம். இப்படி எல்லாவற்றிலிருந்தும்தான் எடுத்திருக்கிறார்கள்’ என்று கூறியுள்ளார்.
இதற்கு முன் பாகுபலியை வைத்துக்கொண்டு ஹாலிவுட்டை மிஞ்சி விட்டோம் என்று சொல்வது சரியில்லை என்பது போல் கருத்து தெரிவித்திருந்தார். கமல் தொடர்ந்து பாகுபலி படத்தின் வெற்றியை ஏற்றுக்கொள்ளாதது போல் பேசுவது குறிப்பிடத்தக்கது.
சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.
