லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் அவரது சொந்த நிறுவனமான ராஜ்கமல் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் உருவான விக்ரம் திரைப்படம் சர்வதேச அளவில் தற்போது திரையரங்கில் 400 கோடிக்கும் மேல் பாக்ஸ் ஆபிஸில் வசூலை பெற்று வசூல் வேட்டையாடிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் விக்ரம் படம் கொடுத்த வெற்றியால் கமல் இப்போது நடிப்பில் முழு கவனம் செலுத்திய நடித்து வருகிறார். அரசியலை ஒருவழியாக விட்டுவிட்டு இப்பொழுது தன்னுடைய ராஜ்கமல் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் மூலமாக நிறைய படங்கள் தயாரிக்க திட்டமிட்டு வருகிறார். கமல் நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் படமான இந்தியன், தேவர்மகன் போன்ற படங்களின் இரண்டாம் பாகம் அடுத்தடுத்து உருவாக உள்ளது.
மேலும் விக்ரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து பழைய நின்று போன படங்கள் அனைத்தையும் மீண்டும் எடுக்கும் முடிவில் இருக்கிறார்கள் தயாரிப்பாளர்கள். இதனால் எல்லா தயாரிப்பாளர்களும் கமல் ஆபீஸ்க்கே படையெடுக்கின்றனர். இதன் ஒரு கட்டமாக செவன்த் சேனல் தயாரிப்பாளர் மாணிக்க நாராயணன் கமலிடம் சென்று பேசியுள்ளார்.
இவர் சரத்குமார் நடித்த ‘கூலி’, தளபதி விஜயின் ‘மாண்புமிகு மாணவன்’, கார்த்தி நடிப்பில் வெளியான ‘சீனு’, கமலஹாசன் நடித்த க்ரைம் த்ரில்லர் படமான ‘வேட்டையாடு விளையாடு’ உள்ளிட்ட படங்களை தயாரித்துப் பிரபலமானவர். தயாரிப்பாளர் மாணிக்க நாராயணன் தயாரிப்பில், 2006 ஆம் ஆண்டு கௌதம் மேனன் இயக்கத்தில் கமல் நடித்து மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற வேட்டையாடு விளையாடு படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க தயாரிப்பாளர் திட்டமிட்டுள்ளனர்.
இதற்காக கமலை சந்தித்து தயாரிப்பாளர் மாணிக்க நாராயணன் பேசியிருக்கிறார். இவர்களது பேச்சுவார்த்தைக்கு நல்ல முடிவு கிடைக்கும் என நம்பப்படுகிறது. இதன்பிறகு வேட்டையாடு விளையாடு படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.