avvai shanmugi
avvai shanmugi

உலகநாயகன் கமல்ஹாசன் ஒவ்வொரு படத்திற்கு வித்தியாசமான லுக்கால் ரசிகர்களை அசரடிப்பவர். இத்தனை வயதிலும் அவரின் படத்திற்கு எதிர்பார்ப்புகளில் மட்டும் பஞ்சமே இல்லை. கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் அவர் நடித்த படம் அவ்வை சண்முகி. 1996 ஆம் ஆண்டு வெளியாகிய இப்படத்தில் மீனா, ஆன், ஜெமினி கணேசன், மணிவண்ணன், டெல்லி குமார் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர்.

படத்தில் 70 சதவீதம் கமல் அய்யர் மாமியாகவே வலம் வந்தார். இதனால், இன்னும் படம் டாப் பட்டியலில் இருந்து இறங்கவே இல்லை. தற்போது இது இல்லை விஷயம். இப்படத்தில் கமலுக்கு மகளாக நடித்திருந்தவர் ஆன். கொழுகொழு பேபியாக அவரின் சுட்டி பேச்சால் கமலுக்கு அடுத்த அப்ளாஸ் இவருக்கு தான் கிடைத்தது.

ஆனால், அவ்வை சண்முகி படத்திற்கு பிறகு அவரை கோலிவுட்டில் காண முடியவில்லை. சிறு வயது முதல் மாடலிங் துறையில் இருக்கும் ஆன் தற்போதும் தன் கவனத்தை அதில் இருந்து திருப்பவில்லை. வந்த அத்தனை வாய்ப்பையும் தேவை இல்லை என ஒதுக்கி இருக்கிறார். தன்னால் அவ்வை சண்முகிக்கு இணையான படத்தில் மட்டுமே நடிப்பேன். தேடித்தேடி நடிக்கும் நேரம் கூட இல்லாத அளவு அம்மணி மாடலிங்கில் பிஸி. இப்போ அவரின் கவர்ச்சி புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

அட! வைரலானதுக்கும் காரணம் இருக்கு, இன்ஸ்டாவில் அவர் வெளியிட்டு இருக்கும் பதிவு என்னவோ பால் கலப்படம் பற்றியது தான். பொண்ணும் அவ்வளோ அறிவா எல்லாத்தையும் சொல்லிருக்கு. ஆனால், அதுக்கு அவர் வெளியிட்டு இருக்கும் புகைப்படம் தான் பிகினியில் உள்ள கவர்ச்சி புகைப்படம். அதற்கு அவரே பதிலும் கொடுத்து இருக்கிறார். நான் ரொம்ப சோம்பேறி. அதான் என் பழைய மாடலிங் புகைப்படத்தை இணைத்து இருக்கிறேன் என பதிவை தட்டி இருக்கிறார். அம்மம்மா!