Connect with us
Cinemapettai

Cinemapettai

இதுதான் என் லட்சியம்! அக்சரா ஹாசன் சபதம்

akshara-haasan

Tamil Cinema News | சினிமா செய்திகள்

இதுதான் என் லட்சியம்! அக்சரா ஹாசன் சபதம்

கமலஹாசனின் இளையமகள் அக்ஷரா ஹாசன் அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியான ஷமிதாப் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். ஆனால் அஜித் நடிப்பில் வெளியான விவேகம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். தற்போது இவரது கனவு பற்றி வெளிப்படையாக கூறியுள்ளார்.

சினிமாவில் இயக்குனராகத்தான் வரவேண்டும் என்ற ஆசை இருந்தது ஆனால் எதிர்பாராத விதமாக நடிகையாகி விட்டேன் என கூறினார். பின்பு என் அப்பாவை வைத்து ஒரு படத்தை இயக்க வேண்டும் என்பது என்னுடைய வாழ்நாள் ஆசை என தெரிவித்தார்.

ஆனால் அப்பாவை வைத்து எந்த கதை எழுதினாலும் அந்த வேடத்தில் அப்பா ஏற்கனவே ஏதாவது ஒரு படத்தில் நடித்திருக்கிறார். அதனால் அப்பாவை வைத்து கதை எழுதுவது கடும் சிரமமாக உள்ளது.

சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்தில் நடிக்கவில்லை அதனால் அதை வைத்து கதையை எழுத இருப்பதாக தெரிவித்தது மட்டுமின்றி, அப்பாவையும் ரஜினிகாந்த் அவர்களையும் இணைத்து ஒரு படத்தில் நடித்தால் சிறப்பாக இருக்கும் என கூறினார். இவர்கள் இருவரையும் வைத்து படத்தை இயக்கினால் நான் பாக்கியசாலி என தெரிவித்தார்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top