லோகேஷ் தம்பி, எனக்கே விபூதி அடிக்க பார்த்தல்ல.. விக்ரம் பட விஷயத்தில் உஷாரான உலகநாயகன்

சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு உலக நாயகன் கமல்ஹாசன் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன.

இத்தனைக்கும் தேர்தல் முடிந்த அடுத்த நாளே படப்பிடிப்பை ஆரம்பித்து விட்டனர் என்பதுதான் கோலிவுட் வட்டாரங்களில் பேச்சாக உள்ளது. இப்படி ஒரு ஆர்வத்தை இந்தியன் 2 படத்தில் காட்டியிருந்தால் இந்நேரம் படம் ரிலீசாக இருக்கும் எனவும் ஒரு பக்கம் கருத்துக்கள் வந்து கொண்டிருக்கின்றன.

மாஸ்டர் படத்தின் கலவையான விமர்சனங்களுக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் தன்னுடைய குருநாதர் கமலஹாசனை வைத்து விக்ரம் படத்தை இயக்கி வருவதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

மேலும் இந்த படம் முழுக்க முழுக்க லோகேஷ் கனகராஜின் பாணியில் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார். அதற்கு காரணம், மாஸ்டர் படத்தில் விஜய்க்காக தன்னுடைய பாணியை விட்டுக் கொடுத்ததாக அவரே ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.

அதுமட்டுமில்லாமல் அந்த படத்தில் விஜய்யின் கதாபாத்திரத்தை விட விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் சிறப்பாக அமைந்தது குறிப்பிட வேண்டிய ஒன்று. அதேபோல் வேலையைத்தான் விக்ரம் படத்திலும் செய்திருக்கிறாராம் லோகேஷ் கனகராஜ்.

கமலஹாசன் கதாபாத்திரத்தை விட வில்லனாக நடிக்கும் பகத் பாசில் கதாபாத்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பதை கண்டறிந்த கமலஹாசன், சில பகுதிகளை கட் செய்து விட்டாராம். இதுபோல் விஜய்யும் உஷாராக இருந்திருந்தால் விஜய் சேதுபதியின் சில காட்சிகளை குறைத்திருந்தால் அது விஜய் படமாக இருந்திருக்கும் என கோலிவுட்டில் கிண்டலடிக்கிறார்களாம்.

vikram-movie-cinemapettai
vikram-movie-cinemapettai
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்