Politics | அரசியல்
காங்கிரஸுடன் கூட்டணி! கமல்ஹாசனை நெருங்கும் அழிவு காலம்
கமலஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கியதிலிருந்து பிற கட்சி தலைவர்களை சந்தித்து பேசி வருகிறார். சமீபத்தில் ராகுல்காந்தியை சந்தித்து பேசிவிட்டு வந்தார். ஏற்கனவே கமலஹாசன் திமுகவுடன் கூட்டணி அமைப்பார் என கூறப்பட்ட நிலையில் தற்பொழுது ராகுல்காந்தியை சந்தித்து வந்தது ஏதோ சந்தேகத்தைக் கிளப்புகிறது.
காங்கிரஸ் கட்சி திமுகவுடன் கூட்டணி உள்ளது. அப்படியிருக்க கமல்ஹாசன் நேரடியாக திமுக கூட்டணியில் இணையாமல் காங்கிரஸ் வழியாக உள்ளே செல்கிறார் என்பது அவருடைய அரசியல் தந்திரம் அல்லது காங்கிரஸ் திமுகவை விட்டு வெளியே வரும் கமலுடன் இணையும் என்பதும் ஒரு கேள்வியாக இருக்கிறது. நாம் தமிழர் கட்சியின் சீமான் தோற்றாலும் பரவாயில்லை திமுக அதிமுகவுடன் கூட்டணி இல்லை என கூறி வந்த நிலையில் கமலஹாசன் தன் கட்சி தொண்டர்களை நம்பாமல் நேரடியாக காங்கிரஸ் கூட்டணியில் வரப்போகிறார்.
ஏற்கனவே காங்கிரஸ் பாஜக வின் நிலைமை தமிழ்நாட்டில் எப்படி இருக்கிறது என்று தெரியும் அப்படி தெரிந்தும் கமலஹாசன் இணைகிறார் என்றால் என்ன காரணம் என்று தெரியவில்லை. அவருக்கு வரவேண்டிய ஓட்டு கூட அவருக்கு வராமல் போக வாய்ப்பிருக்கு. அதேநேரம் பிஜேபி பண்ணும் சில்லறைத்தனமான வேலைகளுக்கு காங்கிரஸ் எவ்வளவோ பரவாயில்லை என்ற அந்தக் கட்சியினர் நினைக்கின்றனர்.

Kamalahaasan – Nammavar
தமிழ்நாட்டில் இப்போது நிலைமைக்கு எதுவேண்டுமானாலும் நடக்கலாம் அதற்கு வரும் தேர்தல் தான் பதில் சொல்லும். இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அரசியல் மாற்றங்கள் தமிழ்நாட்டில் மட்டுமே நிகழ்ந்து வருகிறது அதனால் எது நடந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.
