Home Tamil Movie News அஜித், ரஜினிக்கு சவால் விடும் கமல்.. பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகும் 4 படங்கள் !

அஜித், ரஜினிக்கு சவால் விடும் கமல்.. பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகும் 4 படங்கள் !

rajini-vijay-kamal-ajith
rajini-vijay-kamal-ajith

Kamalhaasan: சினிமாவில் கமலுக்கு நிகரான மற்றொரு கலைஞனை காண்பது கடினம். அந்தளவுக்கு எந்த தொழில்நுட்பமாக இருந்தாலும், எந்த துறையாக இருந்தாலும் அவரது ஆழ்ந்த அனுபவமும், அறிவும் அந்த படத்திற்கும் மட்டுமில்லாது, அவருடன் பணியாற்றும் சக கலைஞர்களுக்கும் அது பயன்படும் விதத்தில் அமையும்.

அப்படி அவருடன் பணியாற்ற இந்தியாவில் உள்ள அனைத்து இயக்குனர்களும் ஆர்வமுடன் உள்ளனர். அதனால்தான் ‘நாயகன்’ பட வெற்றிக்குப் பின், அதாவது, 37 ஆண்டுகளுக்கு பின் மணிரத்னம் மீண்டும் கமலுடன் இணைந்துள்ளார். ‘தக்லைஃப்’ என்று இப்படத்திற்கு பெயர் வைக்கப்பட்டுள்ள நிலையில், இதில், திரிஷா, சிலம்பரசன், ஜெயம் ரவி, ஜோஜு ஜோசப் உள்ளிட்ட நடிகர்கள் இதில் இணைந்துள்ளனர்.

இப்படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் நிறைவடைந்த நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாகமும் விரைவில் தொடங்கும் என்று தகவல் வெளியானது. இந்த நிலையில், ‘கமல் 237’ படத்தை ஸ்டண்ட் மாஸ்டர்களான அன்பறிவ் இயக்குவதாகவும், இப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேசனல் தயாரிக்கவுள்ளதாகவும், இதன் மூலம் அன்பறிவ் இயக்குனர்களாக கமல் அறிமுகப்படுத்த உள்ளதாகவும் தகவல் வெளியானது.

ஆனால், இப்படம் சில காரணங்களால் கைவிடப் படுவதாக கூறப்பட்ட நிலையில், ‘கமல்237’ பட ஷூட்டிங்கிற்கு முன்னதான வேலைகளில் படக்குழு ஈடுபட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகிறது. அதேபோல், ஷங்கர் – கமல்ஹாசன் கூட்டணியில், கடந்த ஜூலை 12 ஆம் தேதி வெளியான படம் ‘இந்தியன் 2’. இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்ற நிலையில், இப்படம் உருவாக்கத்தின்போதே ‘இந்தியன்-3’ படம் வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில், இப்படத்தின் ஷூட்டிங்கும் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகிறது.

மேலும், பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாப்பச்சன், தீபிகா படுகோன் நடிப்பில், நாக் அஸ்வின் இயக்கத்தில் கடந்த மே 9 ஆம் தேதி வெளியான படம் ‘கல்கி 2898 ஏடி’. இப்படமும் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. குறிப்பாக வில்லனாக கமல்ஹாசன் மிரட்டியிருந்தார். இப்படத்தின் 2 ஆம் பாகமும் விரைவில் தயாராக உள்ள நிலையில் இப்படத்தின் பிரீ புரடக்சன் பணிகள் நடந்து வருகின்றன.

அதேபோல், இந்திய சினிமாவே எதிர்பார்த்திருக்கும் அட்லீ இயக்கத்தில் சல்மான்கானுடன் இணைந்து கமல்ஹாசன் நடிக்கவுள்ள படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாராகிறது. இப்படத்தில் கிட்டத்தட்ட கமல் நடிப்பது உறுதியாகியுள்ள நிலையில் இதில் நடிக்க கமல் அதிக சம்பளம் வாங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இத்தொடர்ந்து அவரது கனவுப் படமான ‘மருதநாயகம்’ படத்தின் வேலைகள் மீண்டும் கமல் தொடங்க உத்தேசித்துள்ளதாகவும் சினிமா வட்டாரத்தில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனவே இனிவரும் நாட்களில் கமலின் படங்கள் தொடர்ந்து ரிலீஸாகவுள்ளதால், அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். தற்போது பிக்பாஸில் இருந்து விலகியதால் முழு நேரம் சினிமாவில்தான் அவர் பங்களிப்பு இருக்கும் என்பதால் குறித்த நேரத்தில் தம் படங்களுக்கான பணிகளை அவர் விரைந்து முடித்துக் கொடுத்த நேரம் இருக்கும் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.