சினிமாவை விட்டு விலகுவேன் கமலின் அடுத்த அட்டாக்.! மீம்ஸ் கிரியேட்டர்ஸ் ரெடி.

என்னதான் கமலை மீம்ஸ் மன்னர்கள் நக்கலடித்தாலும், கமலின் உறுதியான கருத்துக்கும் பேச்சுக்கும் ஒரு வார்ம் வெல்கம் சொல்வதை தவிர வேறு வழியேயில்லை.

நடிகர் கமல்ஹாசன் ஆகியோர் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது ஜி.எஸ்.டி வரி தொடர்பாக கட்டிங் பிளேயர் நறுக் போட்ட கணக்காக அவர் பேசியதுதான் ஹாட் டாபிக் இப்போது. இத்தனைக்கும் மத்திய அரசின் கருணை லுக் கமல் மீது விழுந்து அநேக நாளாச்சு.

அப்படி என்னதான் சொல்லியிருக்கிறார் கமல்?

மத்திய அரசு விதித்திருக்கும் ஜி.எஸ்.டி வரியால் திரைப்படத்துறை பெரிதும் பாதிக்கப்படும். சினிமா சூதாட்டம் போன்றது அல்ல; சினிமா என்பது ஒரு கலை. திரைத்துறையை நம்பி ஏராளமானோர் உள்ளனர். சினிமாவை சரியாகவும் தவறாகவும் பயன்படுத்திய அரசியல்வாதிகள் இருக்கிறார்கள். ஜி.எஸ்.டி வரியை தேசிய அளவில் வெளியிடப்படும் பாலிவுட் படங்களுக்கு நிகராக மாநில அரசுகளுக்கு விதிக்கக்கூடாது. அதேநேரத்தில், ஹாலிவுட் படத்திற்கு நிகராக இந்திய சினிமாவுக்கு ஜி.எஸ்டி வரிவிதிப்பதும் சரியல்ல.

இதனால் வேற்றுமையில் ஒற்றுமை என்ற இந்திய கலாச்சாரம் பாதிக்கப்படுகிறது. பிராந்திய மொழிப் படங்களின் வளர்ச்சியும் பின்தங்கிவிடுகிறது. பிராந்திய மொழி படங்கள்தான் இந்தியாவின் பலம். எனவே, சினிமா டிக்கெட்டுக்கு 28 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்கும் முடிவை கைவிடுவது பற்றி மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும். டிக்கெட் மீதான ஜி.எஸ்டி வரியை 12 சதவீதமாக குறைக்க நிதி அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். வரியை குறைக்காவிட்டால் நான் சினிமாவை விட்டு விலகுவேன். கமலின் இந்த ஆவேச பேச்சையடுத்து ஒரு இக்கட்டான கேள்வி எழுந்துள்ளது.

வரி முக்கியமா? கமல் தொடர்ந்து நடிப்பது முக்கியமா? மத்திய அரசின் முடிவுக்கு மக்கள் ஆவலாக வெயிட்டிங்…

Comments

comments

More Cinema News: