Tamil Cinema News | சினிமா செய்திகள்
பிக் பாஸ் பாலாஜிக்கு தட்டிக்கொடுத்து ரிவிட் அடித்த கமல்.. ஒரே வாரத்தில் பிராடு எனக்கூறி ரசிகர்கள்
விஜய் டிவியில் டாப் ட்ரெண்டிங்காக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி தான் பிக் பாஸ் 4. மேலும் தினசரி தாறுமாறாக கண்டன்டுகளை வாரி வழங்கிக் கொண்டிருக்கும் இந்த சீசனில் நேற்றைய தினம் ஹைலைட்டான டாபிக், சனம் செட்டி பங்கேற்ற அழகிப் போட்டியை டுபாக்கூர் என்று பாலாஜி கூறியதுதான்.
மேலும் சனம் ஷெட்டி பங்கேற்ற அந்த போட்டியை டுபாக்கூர் என்று கூறிய பாலாஜி முருகதாஸை நேற்று நடிகர் கமல் எச்சரித்துள்ளார்.
அதாவது கமலுக்கு முன்பாக புரோக்கன் ஹார்ட்டை பாலாஜிக்கு கொடுத்த சனம், தனது சாதனையை டுபாக்கூர் என்று கூறியது மனதை காயப்படுத்தியதாக கூறினார்.
இதையடுத்து பாலாஜிக்கு ஆதரவாய் பேசிய கமல், ‘உங்களை சொன்னதாக ஏன் நினைக்கிறீர்கள்?’ என்று சனத்திடம் கேள்வி எழுப்பினார். பாலாஜி அதைப் புரூவ் பண்ணுவேன் என்று கூறியதை தொடர்ந்து, அந்தப் பேச்சை மழுப்பிவிட்டார் கமல்.
இந்நிலையில் நேற்று முந்தினம் பாலாஜி பேசியதை சரியாக கேட்கவில்லை என்று கூறிய கமல், நேற்று அவர் பேசியதை கேட்டு விட்டு வந்து பாலாஜியை தாறுமாறாய் வெளுத்தெடுத்தார்.
இதையடுத்து பேசிய கமல், ‘பல பேருக்கு அந்த அழகிப் போட்டியில் பங்கேற்றது பெரிய சாதனையாக இருக்கும். அதை நீங்கள் டுபாக்கூர் என்பது மற்றவர்களை காயப்படுத்தும் வகையில் உள்ளது.
முன்பெல்லாம் உங்கள மாதிரி பாடி பில்டர்களை ‘குஸ்திகாரர்கள்’ என்று மரியாதை இன்றி அழைப்பார்கள். உங்களை எப்படி பாடிபில்டர் ஊசி போட்டா உடனே உடம்பு வந்து விடும் என்று கூறினால் உங்களுக்கு கஷ்டமா இருக்குமா அதேபோல்தான் மற்றவர்களுக்கும்.
இது போன்ற நிகழ்வு இனி நிகழாமல் பார்த்துக் கொள்ளுங்கள்’ என்று பாலாஜியை எச்சரித்தார்.
நேற்று முந்தினம் வெறித்தனமாக கைதட்டிய பாலாஜிக்கு நேற்று முகமே மாறிவிட்டது.

balaji-biggboss
மேலும் பாலாஜியை பார்த்து பரிதாப பட்டவர்கள் அனைவரும் தற்போது அவரை ‘பிராடு’ என்ற பட்டத்தை சூட்டி விட்டார்கள்.
