Tamil Cinema News | சினிமா செய்திகள்
நம்ப வைத்து ஏமாற்றிய கமலஹாசன்.. கடைசியில் இந்த நிலைமைக்கு தள்ளப்பட்ட பிக்பாஸ் தர்ஷன்
பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து தொகுப்பாளராக இருப்பவர் உலகநாயகன் கமலஹாசன். அரசியலுக்கு சென்றால் நேரடியாக மக்களை தொடர்புகொள்ள தொலைக்காட்சியை பயன்படுத்திக் கொள்ளலாம் என இதில் பணியாற்றி வருகிறார்.
பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பல பேர் ரசிகர்கள் மத்தியில் பெரும் புகழ் பெற்றனர். டைட்டில் வின்னர் முகேன், லாஸ்லியா, கவின், தர்ஷன் போன்றோர் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் கடைசி சீசனில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றவர் தர்ஷன். தர்ஷனுக்கு கமலஹாசன் தன்னுடைய ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் ஒரு படம் வாய்ப்பு தருவதாக நேரடியாக மேடையில் அறிவித்தார்.
அரசியல்வாதி என்பதை இதில் காட்டிவிட்டார் கமலஹாசன். அறிவிப்பு கொடுத்ததோடு சரி. அதன்பிறகு அவருக்கு வாய்ப்பு கொடுத்ததாகவே தெரியவில்லை. கிட்டத்தட்ட ஒரு வருடங்கள் ஆன நிலையில் தர்சன் நொந்து விட்டாராம்.
அவரை நம்பினால் மக்கள் தன்னை மறந்து விடுவார்கள் என்பதற்காக தற்போது ஒரே ஒரு சிங்கிள் பாடலில் களமிறங்கியுள்ளார். அதில் அவருக்கு ஜோடியாக சீரியல் நடிகை ஆயிஷா என்பவர் நடிக்க உள்ளார்.
தாய்க்குப்பின் தாரம் என பெயரிடப்பட்டுள்ள அந்த சிங்கிள் பாடல் வீடியோ விரைவில் வெளியாகும் என தெரிகிறது.
