தேர்தலில் தோற்ற வேதனையே கமலஹாசனின் மனதை புண்படுத்தி கொண்டிருக்கும் நேரத்தில் மேற்கொண்டு அதை குத்தி குத்தி நொண்டிக் கொண்டே இருக்கின்றனர் நம்ம சினிமாக்காரர்கள்.
தேர்தலுக்கு முன்பே கமல்ஹாசன் நடிக்க ஒப்புக்கொண்ட திரைப்படம்தான் இந்தியன் 2. சரியாக 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இந்த படத்தை வெளியிட்டால் கண்டிப்பாக தன்னுடைய அரசியல் எதிர்காலத்திற்கு சரியாக இருக்கும் என முடிவு செய்து படத்தை ஆரம்பித்தனர்.
ஆனால் அதன் பிறகு ஏகப்பட்ட பஞ்சாயத்துக்கள் வந்து தற்போது பாதி படப்பிடிப்புகள் மட்டுமே முடிவடைந்த நிலையில் மீதி எப்போது தொடங்கும் என்கிற எதிர்பார்ப்பில் கிடப்பிலேயே கிடக்கிறது.
இது குறித்து, சங்கர் மற்றும் தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனத்திற்கும் இடையில் பல பஞ்சாயத்துகள் நடந்து கொண்டிருக்கின்றன. இதுகுறித்து கமல்ஹாசனிடம் பிரச்சனை சென்றுள்ளது. முதலில் நீங்கள் இருவரும் உங்கள் பிரச்சனைகளை முடித்துக் கொண்டு வாருங்கள் என டென்ஷனாகி விட்டாராம்.
முதலில் இந்த பிரச்சனையை தலையிட்டு முடித்து வைக்கலாம் என நினைத்த கமலஹாசன் இருவரின் போக்கும் சரியில்லாத காரணத்தினால் யாரோ எங்கேயோ அடிச்சிட்டு சாவுங்க என்பது போல விட்டுவிட்டாராம்.
தற்போது சங்கர் படம் இயக்க வர மாட்டேங்கிறார் என லைகா ஒரு பக்கம் புகார் தர, படம் எடுக்க ரெடி ஆனால் தயாரிப்பு தரப்பு ரெடியாக இல்லை என சங்கர் ஒரு பக்கம் ஆரம்பிக்க வண்டியை விக்ரம் படம் பக்கம் திருப்பி விட்டாராம் கமல்ஹாசன்.
