fbpx
Connect with us

Cinemapettai

காலாவுக்காக ஒதுங்கிய கமல்! காரணம் என்ன?

rajini-kamal-kaala-viswaroobam2

News | செய்திகள்

காலாவுக்காக ஒதுங்கிய கமல்! காரணம் என்ன?

ரஜினியின் எந்த முடிவும் ரொம்ப பொறுமையாக ஆமை வேகத்தில் இருக்கும். ஆனால் கமல் முடிவு சற்று வேகமா ஓட கூடிய ஆமை வேகத்தில் இருக்கும். ரொம்ப பெரிய வித்தியாசம் இருக்காது. இதே போல காலா ரிலீஸ்க்கு அப்புறம் விஸ்வரூபம் படத்தை ரிலீஸ் பண்ணிக்கலாம்னு ஒதுங்கி கொண்டார்.

விஸ்வரூபம் படத்தை முடித்து படாதபாடு பட்டு வெளியிட்டார். நல்ல இருக்கோ இல்லையா பிரச்சனைகளாலேயே வெற்றி பெற்ற படங்களில் அதுவும் ஒன்று. அதை தொடர்ந்து விஸ்வரூபம் 2 படத்தை நடித்து முடித்தார். மேலும் படத்தின் சவுண்ட் மிக்ஸிங்கை அமெரிக்காவில் முடித்துவிட்டு சென்சாருக்கும் அனுப்பி யு/ஏ சான்றிதழ் வாங்கிவிட்டதாக செய்தி பரவியது.

விஸ்வரூபம் ட்ரைலர் முடித்து வெளியிட்டுகாக காத்திருக்கிறார். வழக்கமா first look தேதி, டீசெர் தேதி, ட்ரைலர் தேதி என கொஞ்சம் கொஞ்சமா ரிலீஸ் செய்து நம் பொறுமையை சோதித்து வெளியிட்டு மார்க்கெட்டிங் செய்துகொள்வார்கள். இந்த தயாரிப்பாளர் சங்க பிரச்சனையால் அதுலயும் மண் விழுந்தது.

கடைசியில் இதெல்லாம் வேலைக்கு ஆகாது என ஒரு முடிவு செய்துள்ளார். காலா ரிலீஸுக்குப் பிறகு படத்தை ரிலீஸ் செய்யலாம் அதுவரை கட்சி பணியை ட்விட்டரில் செய்யலாம் என முடிவு செய்துள்ளாராம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top