கமலஹாசன்

கடந்த பிப்ரவரி 21 மதுரை ஒத்தக்கடையில் தன் கட்சியின் பெயர், கொடி, கொள்கைகள், கட்சியின் உயர் மட்ட உறுப்பினர் விவரம் பற்றிய அறிவிப்பை செய்தார்.

Kamalahaasan

தன் கட்சியின் பெயர் ”மக்கள் நீதி மய்யம்” என்று அறிவித்தார். மேலும் தன் கட்சியின் கொடியையும் ஏற்றினார். கட்சியின் கோடியில் 6 கரங்கள் கூட்டாக இருப்பது போலவும், நடுவில் நட்சத்திரமும் உள்ளது.

MNM

இந்நிலையில் நேற்று கமலஹாசன் தன் ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

“தமிழகத்தில் சில சாலைகளில் மின்சார அபாயம் என்ற பலகையை பார்க்கலாம். அதேபோல் தமிழ்நாட்டிற்கு பார்வையாளர்களின் அபாயம் என்ற பலகையை வைக்கலாம்.தமிழகத்தில் வேடிக்கை மனிதர்களை விட, வேடிக்கை பார்ப்பவர்கள் தான் அதிகம். நாட்டில் பார்வையாளர்கள் அபாயம் உள்ளது. நானும் முதலில் வேடிக்கை பார்ப்பவனாக இருந்தேன். ஆனால் முடியவில்லை. பார்த்தது போதும், பொறுத்தது போதும், பொங்கி எழுவோம் .” என்று தன் கருத்தை பதிவிட்டுள்ளார்.

மாற்றங்களை செய்வதற்கு தன் கட்சியில் உறுப்பினர் ஆகுங்கள் என்ற கோரிக்கையை மக்கள் முன் வைத்துள்ளார்.