Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

மக்கள் நீதி மய்யம் கட்சியை விளம்பரப்படுத்திய பிக்பாஸ் நிகழ்ச்சி.. சின்னத்தை கையில் வைத்து ஓட்டு கேட்ட கமல்!

விஜய் டிவியில் பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பொழுதுபோக்கு நிகழ்ச்சி தான் பிக்பாஸ் சீசன் 4.

இந்த நிகழ்ச்சியின் வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை உலகநாயகன் கமலஹாசன், வீட்டிலிருக்கும் ஹவுஸ் மேட்களை சந்திப்பது வழக்கம்.

அந்த வகையில் நேற்றைய நிகழ்ச்சியின்போது,  கமலஹாசன் அணிந்திருந்த உடையானது சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை கிளப்பியது.

ஏனென்றால் நடிப்பைத் தாண்டி கமலஹாசனுக்கு அரசியலில் தற்போது ஆர்வம் வந்ததால் அவருடைய ரசிகர்களின் ஆதரவுடன் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை  தொடங்கினார்.

எனவே, தற்போது கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில், அவர் அணிந்திருந்த உடையின் கை பகுதியில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் சின்னம் காணப்பட்டது, ரசிகர்களை பெரிதும் வியப்பில் ஆழ்த்தியது.

bb4-kamal-cinemapettai

bb4-kamal-cinemapettai

மேலும் அவ்வப்போது அரசியலைப் பற்றியம் பிக்பாஸ் மேடையில் கமல் பலமுறை பேசியதும் உண்டு. 

தற்போது, அதற்கெல்லாம் ஒரு படி மேலே சென்று, மக்கள் நீதி மய்யம் கட்சியின் சின்னத்தை கமல் கையில் வைத்து ஓட்டை பெறுவதற்கு பிக்பாஸ் நிகழ்ச்சி உதவுவதாக, பிக்பாஸ் ரசிகர்களால் பெரிதும் விமர்சிக்கப்படுகிறது.

Continue Reading
To Top