Tamil Cinema News | சினிமா செய்திகள்
புகழ்பெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளாரா கமல்ஹாசன்!?
இந்தியாவின் புகழ்பெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியின் தமிழ் வெர்ஷனை உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் கமல்ஹாசன் இன்னும் சில நாட்களுக்கு படங்களில் நடிப்பதில் இருந்து சிறிது காலம் ஓய்வு எடுக்க உள்ளார் என்று கூறப்படுகிறது. இந்த ஓய்வு காலத்தின் போது இந்தியாவின் புகழ்பெற்ற ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் நிகழ்ச்சியின் தமிழ் வெர்ஷனை தொகுத்து வழங்க உள்ளதாக பரவலாக பேசப்பட்டது. பிக் பாஸ் ஹிந்தி நிகழ்ச்சியை நடிகர் சல்மான கான் தொகுத்து வழங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து கமல்ஹாசனிடம் கேட்க தொடர்பு கொண்ட போது, அவருடைய செய்தி தொடர்பாளரை அணுக முடிந்தது. பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், ஆனால் இதுவரை எதுவும் எதுவும் முடிவு செய்யப்படவில்லை என்று அவர் உதவியாளர் கூறியுள்ளார். தற்போதைய நிலை குறித்து எந்த தகவலும் இல்லை என்றும், அதை கமல்ஹாசனிடம் தான் கேட்க வேண்டும் என்று கூறினார். நிகழ்ச்சியை தொகுத்து வழங்க நடிகர் கமல்ஹாசன் அதிக அளவில் சம்பளம் பெறுவார் என்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.
